செவ்வாய், 22 ஜூலை, 2025

பறிபோன பதவி, சொத்துக்களை மீட்டுத் தரும் அற்புத ஆலயம்!

பறிபோன பதவி, சொத்துக்களை மீட்டுத் தரும் அற்புத ஆலயம்!

இழந்த பதவி மற்றும் சொத்துகளை மீட்டளிக்கவென்றே அமைந்திருக்கும் ஒரு அற்புதத் திருக்கோயில், ஆதலையூர் பீமேஸ்வரர் ஆலயமாகும். இந்தக் கோயில் கும்பகோணம் - நாகப்பட்டினம் சாலையில் 32 கி.மீ தொலைவில் உள்ள ஆதலையூரிலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஆதலையூர் என்று பெயர் வரக் காரணமான புராண வரலாற்றின்படி, சிவபெருமான் கயிலாயத்தில் புதிதாக ஒரு திருவிளையாடலைத் தொடங்கினார். அந்த திருவிளையாட்டில் அவர் பலவாறு உருமாறி வில்வமரம், கங்கை என்று எந்த ரூபம் எடுத்தாலும் பார்வதி தேவி அவரைக் கண்டு பிடித்து விட்டார். இதையடுத்து, சிவபெருமான் பூலோகம் சென்று பசுவாக உருமாறினார். அது ஒரு முரட்டுப் பசு. அது யாருக்கும் அடங்காமல் எல்லோருக்கும் துன்பங்கள் கொடுத்ததால் அதை ஊர் மக்கள் கட்டி வைத்தனர். ஆனால், அங்கே வந்த பார்வதி தேவி பசுவைக் கண்டு மனமிரங்கி, அதை அவிழ்த்து விட்டு விட்டாள்.


பசு உருவத்தில் இருந்த சிவபெருமான் தனது சுய உருவத்தைக் காட்ட, பார்வதி தேவி மிகுந்த ஆனந்தம் அடைந்தாள். இதனால் ‘ஆனந்தநாயகி’ என்னும் பெயர் இத்தலத்து அம்பாளுக்கு ஏற்பட்டது. 'ஆ' என்றால் 'பசு', 'தளை' என்றால் 'கட்டுதல்'. பசுவைக் கட்டிப்போட்ட இடம் என்பதால் இந்த ஊருக்கு ஆதளையூர் என்ற பெயர் ஏற்பட்டது. அது நாளாவட்டத்தில் மருவி ஆதலையூர் என ஆயிற்று.

இதே தல புராணத்தில் ஈஸ்வரனுக்கு ‘பீமேஸ்வரர்’ என்ற பெயர் வரக் காரணமான புராண வரலாறும் உள்ளது. துரியோதனன், பாண்டவர்களுக்கு தனது தேசத்தில் பாதியைத் தர மறுத்ததால், மகாபாரதப் போர் ஆரம்பிக்கும் முன்பு, பாண்டவர்கள் தாங்கள் இழந்த தேசத்தைப் பெற பல தலங்களுக்குச் சென்று வழிபட்டனர். அப்போது பீமன் மட்டும் தனியாக ஆதலையூர் வந்து அங்கேயுள்ள தாமரைக் குளத்தில் நீராடி சிவபெருமானை வணங்கினான். தாங்கள் இழந்த தேசத்தை மீட்டுத் தர சிவனை வேண்டி வழிபட்டான்.


சிவபெருமான் பீமனுக்கு தரிசனம் அளித்து அவனுக்கு ஆசி வழங்கினார். பிறகு குருக்ஷேத்திர யுத்தம் நடைபெற்றது. பாண்டவர்கள் தாங்கள் இழந்த தேசத்தையும், பதவியையும் மீட்டனர். பீமன் இங்கே வந்து வழிபட்டதால் இங்கேயுள்ள ஈஸ்வரனுக்கு பீமேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

பீமன் வந்து வழிபட்டு வெற்றி கண்டதால், ஏதோ காரணத்திற்காக பதவிகளை இழந்தவர்கள் மற்றும் தங்கள் சொத்தாக உள்ள வீடு, நிலபுலங்களை சண்டை சச்சரவு, கோர்ட்டு, வழக்கால் இழந்தவர்களும் ஆதலையூருக்கு வந்து இங்கேயுள்ள பீமேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டால் அவை மீண்டும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

தற்காலத்தில், தேர்தலில் நிற்பவர்கள் தாங்கள் ஜெயித்து பதவியை அடைய வேண்டும் என்பதற்காக இங்கே வந்து வழிபடுவதால் இந்த பீமேஸ்வரர் கோயில் தேர்தலில் வெற்றிக்கும் ஒரு பிரபலமான கோயிலாக உள்ளது.

தரித்திரம், பீடைகளைப் போக்கும் சித்தர் ஜீவ சமாதி வழிபாடு!

தரித்திரம், பீடைகளைப் போக்கும் சித்தர் ஜீவ சமாதி வழிபாடு!


வாழ்க்கையில் நம்மை நல்ல சக்திகள் ஒருபுறம் இழுத்தாலும், கெட்ட சக்திகள் இன்னொரு புறம் சேர்ந்து இழுத்துக் கொண்டேதான் இருக்கும். எந்தப் பக்கம் நாம் செல்லப் போகிறோம் என்பதை வைத்துதான் நம் வாழ்க்கை இருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நேர்மறை ஆற்றல்களும், எதிர்மறை ஆற்றல்களும் கலந்துதான் இருக்கின்றன. எல்லா விஷயத்திற்கும், எதிர்மறையான ஒரு விஷயம் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில், தரித்திரங்கள், பீடைகள் எனப்படும் துர்சக்திகளை நம்மிடமிருந்து விரட்டி அடித்து நல்ல சக்தி தருவதில் சித்தர் வழிபாடு சிறந்து விளங்குகிறது. சித்தர் வழிபாடு செய்வதன் மூலம் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

எடுத்த காரியங்கள் அனைத்திலும் தோல்வியை தழுவுபவர்கள், காலப்போக்கில் விரத்தியில் மூழ்கி விடுகிறார்கள். தொடர் தோல்விகள், அவமானங்கள், சறுக்கல்கள் என்று சந்தித்துக் கொண்டிருக்கும், உங்களது ஜாதகத்தில் கேது பகவான் சரியாக இருக்கிறாரா? என்று பாருங்கள். கேது பாதிப்பு அடைந்திருந்தால், ஜாதகருக்கு இதுபோன்ற பிரச்னைகள் தொடர்ந்து நடக்கும். எதை செய்தாலும் அதில் திருப்தி உண்டாகாது. எதையாவது செய்து முன்னேறலாம் என்றால், அதற்கான வழியும் கிடைக்காது.


நீங்கள் நினைத்ததை அடைவதில் பிரச்னைகள் இருந்தால் சமாளித்து விடலாம். ஆனால், அடையவே முடியாத சிக்கல்கள் இருந்தால் என்னதான் செய்வது? என்று குழம்பிப் போயிருப்பீர்கள். வாழ்க்கையே சூனியமாகத் தெரியும். ‘எல்லோரையும் போல நம்மாலும் சாதாரணமாக வாழ முடியாதா?’ என்று விரக்தியின் உச்சத்தை அடைய வைத்து விடுவார் இந்த தந்திரகார கேது பகவான். தரித்திரங்களும், பீடைகளும் நம்மை சோம்பேறித்தனமாக எப்போதும் வைத்துக் கொள்ளும்.

நாம் நினைத்தால் கூட நம்மால் சுறுசுறுப்பாக இயங்கி, வெற்றியின் பக்கம் செல்ல முடியாது தடுத்து நிறுத்தும். இப்படிப்பட்ட பிரச்னைகள் உங்களுக்கு இருந்தால், கண்டிப்பாக நீங்கள் சித்தர் ஜீவ சமாதி வழிபாட்டினை செய்யலாம். சித்தர்களுடைய ஜீவ சமாதிகளை தேடிச் செல்லுங்கள். எந்த சித்தர் உங்களுக்குப் பிடித்தாலும், அந்த சித்தரின் ஜீவ சமாதிக்கு செல்லுங்கள். பல திருத்தலங்களில் ஜீவசமாதி அடைந்த சித்தர்களைத் தேடி நாமாக சென்று வழிபட வேண்டும்.


சித்தர்கள் நம்மை அழைத்தால் அடிக்கடி நீங்கள் பட்டாம்பூச்சியை பார்ப்பீர்கள். அழகிய பட்டாம்பூச்சிகள் உங்களை அடிக்கடி ஈர்த்தால், சித்தர் உங்களை அழைக்கிறார் என்று அர்த்தம். சித்தரின் சமாதியை அடைந்ததும், உங்களுக்கு எத்தனை வயதோ, அந்த வயதின் எண்ணிக்கைக்கு ஏற்ப சித்தர் ஜீவசமாதியை வலம் வர வேண்டும். 20 வயது என்றால் 20 முறை சுற்றி வாருங்கள். 40 வயது என்றால் 40 முறை சுற்றி வாருங்கள்.

ஒவ்வொரு முறை சுற்றி வரும் பொழுதும் சமாதியின் முன்பு ஒரு கற்பூரத்தை ஏற்றி வைக்க வேண்டும். இப்படி எத்தனை முறை சுற்றி வந்து கற்பூரத்தை ஏற்றி வைத்து வழிபடுகிறீர்களோ, அத்தனை நன்மைகளை உங்களுக்கு சித்தர் அருள்வார் என்பது நம்பிக்கை. சகல தரித்திரங்களும், பீடைகளும் நீக்கி, கேது பகவானின் தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி கொடுக்கக்கூடிய இந்த எளிய வழிபாட்டினை நீங்களும் செய்து பயனடையுங்கள்.

பக்தர்களை காக்கும் பக்தவச்சல பெருமாள்!

பக்தர்களை காக்கும் பக்தவச்சல பெருமாள்!

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் சேரன்மாதேவி அருள்மிகு ஶ்ரீ பக்தவத்சலப் பெருமாள் திருக்கோயில், பக்தர்களை காக்கும் பக்தவச்சல பெருமாள்.

கட்டுமானம் மற்றும் காலம்:

தாமிரபரணி ஆற்றங்கரையில், பிற்கால பாண்டியர்களால், 1012-1044 ஆம் ஆண்டுகளின் காலகட்டத்தில் கட்டப்பட்டது.

ஆலய அமைப்பு:

கருவறையில் நம் பெருமாள், ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் எனும் திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார். கருவறையில், தேவியர் இல்லாமல் நம் பெருமாள் தனித்து நின்றிருப்பது போல, ஆலய பிரகாரத்தில் ஸ்ரீ பூமாதேவி மட்டும் திருக்காட்சியளிக்கிறார். ஏனைய பரிவாற மூர்த்திகளும் இடம்பெற்றுள்ளனர்.

ஆலயச் சிறப்பு:

வியாசரால் குறிப்பிடப்பட்ட சிறப்புமிக்க 12-கோயில்களில், ஒன்றாகும். உள்ளூர் மக்களை தவிர வெளியூர் மக்களால் அதிகம் அறியப்படாத இவ்வாலயத்தில் வடிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு சிற்பமும் அற்புதமானவை. கலைநயம் மிக்கவை.🍁

பிரார்த்தனை மற்றும் பரிகாரம்:

பிரகார மண்டபத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ யோக நரசிம்மருக்கு நடைபெறும் சனிக்கிழமை வழிபாடு மிகவும் விசேஷமாகும். அசுப யோகத்தில் பிறந்து பல்வேறு குறைபாடுகளில் சிக்கி தவிக்கும் மக்கள் ஆலயத்திற்கு வந்து நரசிம்மரை வேண்டி வழிபடுகின்றனர். குறைகள் தீர்ந்த பின்பு மீண்டும் வந்து பரிகார பூஜை செய்கிறார்கள்.

அமைவிடம்:

சேரன்மகாதேவி எல்லையில், பசுமையான வயல்களின் நடுவில் அமைந்துள்ள (கல்வெட்டுகள் நிறைந்த) இத்திருத்தலம், இந்திய தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டில் உள்ளது.🍁

உற்சவங்கள் மற்றும் திருவிழாக்கள்:

திருமாலுக்கு உகந்த முக்கியமான விழாக்கள் அனைத்தும் கொண்டாடப்படும் இத்திருத்தலத்தில் பெருந்திருவிழாவாக நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவம் விழா வெகு விசேஷமாகும். பஞ்சாங்கம்’ என்பதிலுள்ள நாள் அல்லது தினம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களில், யோகம் என்பது முக்கியமானது. நட்சத்திரமும், கிழமையும் இணைவதும் யோகம் தான்.🍁

தவிர ஜோதிடத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாகவும், அவற்றில் பல, தனிநபர் ஜாதகங்களில் இருப்பதாகவும் ஜோதிடர்கள் சொல்வதுண்டு. அத்தகைய யோகங்களில் சுபயோகம் அசுப யோகம் என்று இரண்டு வகை உண்டு அசுப யோகங்களில் பிறந்தவர்கள், தங்களின் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ஒரு சில குடும்பங்களில் நிறைய பேருக்கு திருமணமே கைகூடி வராத நிலையை நாம் பார்த்திருப்போம்.🍁

இவற்றிற்கெல்லாம் வழிபாட்டுத் தலம் சேரன்மகாதேவி பக்தவத்சலப் பெருமாள் கோயில். பக்தர்களால் அதிகம் அறியப்படாத பழமையான ஆலயங்கள் பலவற்றில் இதுவும் ஒன்று.

திருநெல்வேலியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் , தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கிறது.

அசுப யோகங்களில் பிறந்தவர்களின் முன்னோர்களுடைய ஆன்மா சாந்தி பெற, சேரன்மகாதேவியில் உள்ள பக்தவத்சலப் பெருமாள் கோவிலில் செய்யும் வழிபாட்டு முறைதான் சிறப்பானது.

10 வகையான அசுப யோகத்தில் பிறந்தவர்கள், குடும்பத்தில் உள்ளவர்களின் ஆத்மா நற்கதி அடையாத தோஷம் உள்ளவர்கள், துயரங்கள் நீங்க நேராக இந்தத் திருத்தலம் வந்து, நதியில் நின்று, தன் குடும்பத்தில் இறந்த ஆன்மாக்களை நினைத்து நீராடினால், அவர்களின் ஆன்மா நற்கதி அடையும் என்று, தாமிரபரணி மகாத்மீயம் கூறுகிறது.🍁

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11.45 மணி வரை திறந்திருக்கும்.

சேர்த்து வைக்கும் புண்ணியமே சந்ததியைக் காக்கும்!

சேர்த்து வைக்கும் புண்ணியமே சந்ததியைக் காக்கும்!

ஒருவர் செய்த பாவ, புண்ணியங்களே அவரது சந்ததியை சேரும். வாழ்நாள் முழுவதும் நன்மைகள் செய்தால் வாழையடி வாழையாக நம் சந்ததியும் நலமாக வாழும். ‘சேர்த்து வைத்த புண்ணியம்தான் சந்ததியை காக்கும்’ என்று சொல்வார்கள்.

பாரதப் போரில் பாண்டவர்கள் ஸ்ரீ கிருஷ்ணனின் உதவியால் வெற்றி பெற்றனர். இதனால் கௌரவர்களின் தந்தை திருதராஷ்டிரன் வருத்தமுடன், ‘கிருஷ்ணா… நான் பார்வையற்றவனாக இருந்தாலும் தர்ம வழியில்தான் ஆட்சி புரிந்தேன். அப்படி இருந்தும் இப்போது புத்திர சோகத்தால் வாடுகிறேன். என் நூறு பிள்ளைகளில் ஒருவர் கூட போரில் உயிர் திரும்பவில்லையே. எனக்கு மட்டும் ஏன் இந்தக் கொடுமை’ எனக் கேட்டார்.🍁

ஸ்ரீ கிருஷ்ணர் சிரித்தபடி, ‘நான் சொல்லும் கதையைக் கேட்டால் உங்களுக்கு உண்மை புரியும். நீதி தவறாத மன்னர் ஒருவர் இருந்தார். அவரிடம் சமையல்காரர் ஒருவர் புதிதாக வேலைக்கு சேர்ந்தார். அவரது கை பக்குவம் மன்னருக்கு மிகவும் பிடித்துப் போனது. தனது திறமையைக் காட்டி மன்னரின் மனதில் இடம் பிடிக்க சமையல்காரரும் விரும்பினார். அதற்காக அரண்மனை குளத்தில் வசித்த அன்னத்தின் குஞ்சு ஒன்றை யாருக்கும் தெரியாமல் பிடித்து வந்து இரவோடு இரவாக மன்னருக்கு சமைத்துக் கொடுத்தார். அது என்ன உணவு என்று தெரியாமல் மன்னரும் அதை சுவைத்து மகிழ்ந்தார். அதோடு, அடிக்கடி அந்த உணவை சமைத்து தரும்படியும் கட்டளையிட்டார்.

இப்போது சொல்லுங்கள், மன்னர் மற்றும் சமையல்காரர் இருவரின் தண்டனைக்குரியவர் யார்’ என திருதராஷ்டிரரிடம் கேட்டார் ஸ்ரீ கிருஷ்ணர். உடனே திருதராஷ்டிரன் ‘தான் சாப்பிடுவது என்ன உணவு என்பது கூட தெரியாமல் ருசித்துச் சாப்பிட்ட மன்னவனே குற்றவாளி’ என்றார்.🍁

நீதி தவறாத மன்னர் தாங்கள் என்பதை நிரூபித்து விட்டீர். அதன் காரணமாகத்தான் உங்களுக்கு நூறு மகன்களும் சிறந்த மனைவியும் இப்பிறவியில் கிடைத்தனர். நான் சொன்ன கதை உமது முற்பிறவியைப் பற்றியதுதான். அந்த அன்னக்குஞ்சு சமையலை தெரியாமல் உண்ட மன்னன் நீர்தான். செய்த பாவம் என்னவென்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே.

தினமும் அன்னத்தின் மாமிசத்தை என்னவென்று தெரியாமல் ரசித்து சாப்பிட்டீர் அல்லவா? இப்படிக் கண்ணிருந்தும் குருடனாக இருந்ததால் இந்தப் பிறவியில் இந்த நிலைக்கு ஆளாக நேர்ந்தது. குஞ்சுகளை இழந்த தாய் அன்னம் போல பிள்ளைகளை இழந்து நீங்கள் துன்பம் அனுபவிக்க வேண்டி வந்தது’ என்றார்.

‘கிருஷ்ணா, முற்பிறவியில் செய்த பாவம் என்னையும் என் பிள்ளைகளையும் தண்டித்து விட்டதே’ என அழுதார் திருதராஷ்டிரன்.🍁

இனியாவது நாமும் நற்செயல்களில் ஈடுபட்டு பிள்ளைகளுக்கு சொத்தாக புண்ணியத்தை விட்டுச் செல்வோம்.

அம்பிகையின் அருள் நலம் கூட்டும் கதலி கௌரி விரதமும்; ரம்பா திருதியை விரதமும்!

அம்பிகையின் அருள் நலம் கூட்டும் கதலி கௌரி விரதமும்; ரம்பா திருதியை விரதமும்!

குடும்ப ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்படும் விரதங்களில் ஒன்று கதலி கௌரி விரதம். வைகாசி மாத வளர்பிறை சதுர்த்தியன்று வரும் கதலி கௌரி விரதத்தை, பலர் சிரத்தையுடன் மேற்கொள்கின்றனர். இந்த விரதம் நாளை 29ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த விரதம் குறித்த சில விஷயங்களை இப்பதிவில் காண்போம்.

வாழை மரத்தடியில் அல்லது வீட்டு ஸ்வாமி அறையில் கோலமிட்ட பலகை மீது வாழை இலையை போட்டு அதன் மீது சிவபெருமானும், பார்வதி தேவியும் சேர்ந்து இருக்கும் படம் அல்லது சிலையை வைக்க வேண்டும். அருகே குத்து விளக்கினை ஏற்றி வைக்கவேண்டும். படம் மற்றும் குத்து விளக்கினை அலங்கரித்து, பூக்களால் அர்ச்சித்து, விரத பூஜைகளை மேற்கொள்ளவேண்டும்.

ஒரு தட்டில் நிவேதனம் செய்ய, 108 கதலி அல்லது ஏதாவது வாழைப்பழங்களை வைத்துக் கொள்வது அவசியம். பூஜை முடிந்த பிறகு, கதலி வாழைப் பழங்களை நிவேதனம் செய்து, ஆரத்தி காட்டிய பின் அப்பழங்களை எட்டு வயதிற்குட்பட்ட சிறுமியர்களுக்கு சாப்பிட அளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம், கணவன் - மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நீங்குமென்றும், வாழையடி வாழையாக குலம் தழைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது.🍁

கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து அமர்ந்து கதலி கௌரி பூஜை செய்வது சிறந்தது. ஒருவேளை, கணவன் வேலை நிமித்தம் வெளியூர் சென்றிருந்தால், மனைவி மட்டும் விரத பூஜையை செய்யலாம். கதலி கௌரி விரத பூஜை செய்ய, மாலை 6 மணி முதல் 8 மணி வரை நல்ல நேரமாகும்.

அதேபோல், வைகாசி மற்றும் கார்த்திகை மாதங்களின் வரும் வளர்பிறை சதுர்த்தியில் (நாளை) வரும் ரம்பா திருதியை விரதம் விசேஷமானதாகும். அழகு மற்றும் செல்வத்தை அளிக்கும். அம்பிகையின் நிறம் பொன் என்பதால், பெண்கள் மஞ்சள் பொன்னால் அம்பிகையை பிரதிபலித்து செய்யும் விரத பூஜை, ரம்பா திருதியை விரதம் ஆகும்.

வரலெட்சுமி விரத நோன்பு போல, மண்டபம் அமைத்து, வாழைக்கன்று கட்டி, கலசம் வைத்து, துர்கா, லெஷ்மி, சரஸ்வதி அஷ்டோத்திரம் படித்து, பூக்களால் அர்ச்சித்து வழிபடுவது வழக்கம். அம்பிகைக்கு வெல்லத்தினால் செய்த நிவேதனம் படைப்பது விசேஷம்.🍁

ரம்பா திருதியைப்பற்றி கூறப்படும் புராணக்கதை சுவாரசியமானதாகும். ஒரு சமயம், தேவலோக அப்சரஸ்களாகிய ரம்பா, ஊர்வசி, மேனகா மூவரிடையே யார் பேரழகி மற்றும் யார் நடனத்தில் சிறந்தவர் என்ற சர்ச்சை எழ, தேவேந்திரனிடம் சென்று முடிவு கேட்டனர். தேவேந்திரனோ, மூன்று பேரும் ஆடுங்கள். நான் நடுவராக இருந்து தீர்ப்பளிக்கிறேன் என்றவுடன், மூவரும் சிறப்பாக ஆடினர். இந்திரனின் கவனத்தைக் கவர வேண்டுமென்று, ரம்பா அரங்கமே அதிரும் வண்ணம் ஆடுகையில், நளினம் குறைந்து ரம்பாவின் நெற்றிப்பொட்டும், சந்திரப் பிரபையும் கீழே விழுந்தன. இதைக் கண்டு ஊர்வசியும், மேனகையும் சிரிக்க, ரம்பா அவமானப்பட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.🍁

கலையை அவமதித்த ரம்பா மீது, கலைவாணி கோபமடைந்ததால், ரம்பாவின் அழகும், கலையும் அவளை விட்டு நீங்கின. இதற்கு பிராயச்சித்தம் என்னவென்று ரம்பா, இந்திரனிடம் கேட்க, "பூலோகத்தில் பார்வதி தேவி கௌரி அன்னையாக அவதரித்து, ஒரு மகிழ மரத்தடியில் தவமிருக்கிறாள். அவளை நினைத்து விரதமிருந்து வழிபட்டால், அவளின் அருள் கிடைக்கும். உன் குறைகள் நீங்கும்" என்றார்.

இந்திரன் கூறியவாறே, ரம்பாவும் மிகவும் சிரத்தையுடன் அந்த விரதமிருந்து கௌரி தேவியை வழிபட, பார்வதி தேவியின் அருள் மற்றும் அழகும், கலையும் திரும்பக் கிடைத்தது ரம்பாவிற்கு.

ரம்பாவின் விரதத்தால் ஈர்க்கப்பட்ட கௌரி தேவி, ‘‘ரம்பா திருதியை அன்று விரதமிருந்து வழிபடும் பெண்களின் திறமையும் அழகும் மென்மேலும் வளரும். செல்வம் பெருகும்" என்று ரம்பாவிற்கு அருள்பாலித்தாள்.🍁

இத்தனை பெருமைகள் கொண்ட ‘கதலி கௌரி விரதம்’ மற்றும் ‘ரம்பா திருதியை விரதம்’ போன்றவற்றை மேற்கொண்டு, பார்வதி தேவியை மனதார வணங்கி வழிபட்டு நன்மைகள் பல பெறுவோம்!

திங்கள், 21 ஜூலை, 2025

எமனை விரட்டிய நந்தி உள்ள கோயில் எது தெரியுமா?

எமனை விரட்டிய நந்தி உள்ள கோயில் எது தெரியுமா?


கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் சாலையில் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருவைகாவூர். எமனை விரட்டிய நந்தியுள்ள கோயில் அமைந்த திருத்தலம் இதுவாகும். இது தேவார பாடல் பெற்ற சிவத்தலமாகும். மிகப் பழைமையான கோயில். இறைவனின் பெயர் வில்வநாத சுவாமி. இறைவியின் பெயர் மங்களாம்பிகை. வில்வ வனங்களுக்கு நடுவே கோயில் கொண்டிருந்ததால் இறைவனுக்கு இப்பெயர் வந்தது.

தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. சோழர் கால பாணியில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலின் முகப்பில் வவ்வாலத்தி மண்டபம் உள்ளது. அதனுள் நுழைந்தால் மிகவும் விசாலமான பிராகார சுற்று உயர்ந்து, நீண்ட மதில் சுவர். அதனையடுத்து மிகச்சிறிய, ஆனால் கலை அழகுடன் கூடிய கோபுரம் காணப்படுகிறது. கருவறையின் முன்னால் இருக்கும் நந்தி வித்தியாசமாக இருக்கிறது. மற்ற சிவாலயங்களில் பெரும்பாலும் நந்தி கோயிலின் கருவறையை நோக்கியபடியே அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால், இங்கு நுழைவாயிலை நோக்கிக் கொண்டு காட்சி தருகிறது.


எமன் ஒரு சமயம் சிவபெருமானை எதிர்க்க, அதனால் கோபம் கொண்ட நந்தி தேவர் எமனை விரட்டிக்கொண்டு ஓடி வந்தது. நந்தி சீறிய வேகத்தில் எமன் பாய்ந்து கோயிலின் எதிரில் உள்ள குளத்தில் விழுந்து மூழ்கியதாக சொல்லப்படுகிறது. மீண்டும் எமன் கோயிலுக்குள் நுழையாமல் பாதுகாப்பாக நந்தி இன்னமும் கோயில் குளத்தைத் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

எமன் விழுந்த குளம் ‘எமகுளம்’ என்ற பெயரில் இன்றளவும் வழங்கி வருகிறது. மற்ற கோயில்களை போலவே இங்கும் விநாயகர், முருகன், துர்கை சன்னிதிகள் உள்ளன. கோயில் திருச்சுவர்களில் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. கோயிலின் உள்ளே ஆங்காங்கு வேடன் மோட்சமுற்ற கதையை சுதையாகவும் சிற்பமாகவும் செய்து வைத்திருக்கிறார்கள். கிழக்கு நோக்கி சித்தி விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது.


ஆலயத்தில் சம்ஹார முத்துக்குமாரசாமியின் திருவடி வலது காலை மயில் மேல் ஊன்றி வில்லேந்திய திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இந்த சம்ஹார மூர்த்தியை தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது ஆறு சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து 6 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் எதிரிகள், பகைவர்கள் தொல்லை விலகும்.

கோயில் வெளிப் பிராகாரத்தில் விநாயகர் சன்னிதிக்கு அருகில் சனீஸ்வரர் தனி சன்னிதியில் எழுந்தருளி உள்ளார். எனவே, இத்தல விநாயகரையும் சனீஸ்வரரையும் கந்தசாமியையும் பைரவரையும் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகள் வழிபட்டு வந்தால் சகல சனி தோஷங்களும், மாந்தி தோஷமும் அகன்று விடும் என்று கூறப்படுகிறது.

இம்மையிலும் மறுமையிலும் புண்ணியத்தைப் பெற்றுத் தரும் கோ தானம்!

இம்மையிலும் மறுமையிலும் புண்ணியத்தைப் பெற்றுத் தரும் கோ தானம்!


இந்து மதத்தில் கடவுளுக்கு நிகராக வனங்கப்படும் ஒரு உயிரினம் பசு. மகாலட்சுமியின் அம்சமாகப் போற்றப்படும் பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் வலம் வந்த புண்ணிம் கிடைக்கும். பசுவைப் பூஜித்தால் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவரையும் பூஜை செய்த புண்ணியம் உண்டாகும்.

பசு உண்பதற்கு புல் கொடுத்தாலும் (கோக்ராஸம்), பசுவின் கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) கொடிய பாவங்கள் விலகும். இதனை உணர்ந்தே நம் முன்னோர்கள் ஆங்காங்கே ஆவுரஞ்சுக்கல் அமைத்தனர்.

பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் புண்ணியமான வேளை ஆகும். பசு நடக்கும்போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது எட்டு வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும்.

பசுவின் கால்பட்ட தூசியைத்தான் ரகு சக்ரவர்த்தி, அஜசக்ரவர்த்தி, தசரத சக்ரவர்த்தி போன்ற மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

`மா’ என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தைத் தருகிறது. பசு வசிக்கும் இடத்தில் பசுவின் அருகில் அமர்ந்து செய்யும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு பங்கு பலனைத் தருகின்றன.

மனிதனின் கண்களுக்குப் புலப்படாத ம்ருத்யு, எமன், எமதூதர்கள் பசு மாட்டின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள். எனவேதான், ஒருவர் இறக்கும்போது பசு சத்தம் போடுகிறது.


ஒருவர் இறந்த பின் அந்த ஆன்மா, பரலோகத்திற்கு அழைத்துச் செல்லப்படும் வேளை அஸிபத்ர வனத்தில் வைதரண்ய நதியைக் (மலம், சலம், சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பூலோகத்தில் பசு தானம் செய்தவர்களுக்கு இந்தத் துன்பம் நேர்வதில்லை. அவர் தானம் செய்த பசு அங்கு தோன்ற, அதன் வாலைப் பிடித்துக் கொண்டு் வைதரண்ய நதியைக் கடந்து விடலாம் என்று கருட புராணம் கூறுகிறது.

உலகம் எத்தகைய விஞ்ஞான வளர்ச்சியடைந்தாலும் அதன் தொடர்ச்சியாய் எத்தகைய பாதிப்புகள் நிகழ்ந்தாலும் பசுக்கள் வசிக்கும் இடங்களுக்கு மட்டும் எவ்வித பாதிப்பும் நிகழாது என்பது ஆன்மிகத்தில் உள்ள ஆழமான நம்பிக்கை.

பசு வளர்ப்பு என்பது கிராமப்புறங்களில் மட்டுமே தற்போது சாத்தியம். ஏனென்றால், நகர்ப்புறங்களில் அதற்கான சத்தியம் மிக மிகக் குறைவே. ஆகையால், நாம் கிராமப்புறங்களுக்கு செல்லும்போது பசுவை வணங்குவோம். கோயில்களுக்குச் சென்றாலும் அங்கு இருக்கும் பசுவை வழிபடுவோம்.

தொற்று நோய்களை குணப்படுத்தும் பாடகம் தூதஹரி பெருமாள்!

தொற்று நோய்களை குணப்படுத்தும் பாடகம் தூதஹரி பெருமாள்!


ஸ்ரீ வைஷ்ணவ திருப்பதிகள் 108ல் ஒன்றான காஞ்சிபுரத்து திவ்ய தேசங்களுள், ‘பாடகம்’ என்று பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் அருள்மிகு பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோயில் ஆகும். இது மிகவும் பழைமையானதும், பிரசித்தி பெற்றதுமாகும்.

இத்திருக்கோயில் சங்கர மடத்தில் இருந்து தென்மேற்கில் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்காக தூதுவராக சென்றதால் ‘பாண்டவ தூதப் பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். இத்திருக்கோயில் கல்வெட்டுகளில் 'தூதஹரி' என குறிப்பிடப்படுகிறார். மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் மிகவும் சிறப்பு பெற்றவையாகக் கருதப்படுவது கிருஷ்ண அவதாரமே. கண் பார்வையற்ற திருதராட்டிரருக்கு கண நேரம் கண் பார்வை அளித்து தன்னுடைய பெரிய விஸ்வரூப தரிசனத்தை கண்ணபிரான் வழங்கினார். அதேபோல், அர்ச்சுனனின் மகனான பரீட்சித்து மன்னரின் மகனான ஜனமே ஜெயனுக்கும், ஹாரித மாமுனிக்கும் இப்பெருமாள் தரிசனம் கொடுத்தார் என்பது புராண வரலாறு.

கருவறையில் உள்ள பாண்டவ தூத பெருமாளின் பிரம்மாண்ட உயரம் 25 அடி உயரம் ஆகும். கிருஷ்ணர் மனித வடிவில் தோன்றியதால் இரண்டு கைகளுடன் மட்டுமே இந்த ஆலயத்தில் சித்தரிக்கப்படுகின்றார். அதில் ஒன்று அபய முத்திரை பாதுகாப்பிற்காக. மற்றொன்று வரத முத்திரை கொடுப்பதற்கான அறிகுறி.

இத்திருக்கோயிலில் ருக்மணி பிராட்டிக்கும் சக்கரத்தாழ்வாருக்கும் தனித்தனியாக சன்னிதிகள் உள்ளன. பெருமாள் விமானம் சக்கர விமானம் என்று அழைக்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் அருளாளப் பெருமாள் எம்பெருமானார் என்கிற ஆச்சாரியார் எழுந்தருளியிருப்பது மற்றொரு விசேஷமாகும். இவ்வாசாரியார் பூர்வத்தில் யக்ஞமூர்த்தி என்கிற திருநாமம் பூண்டு ராமானுஜரோடு 18 நாள் வாதம் செய்தார். பிறகு அவருடைய உபதேசங்களால் நெஞ்சுருகி, அவருடைய திருவடிகளில் அடைக்கலம் புகுந்த பின் அநேக மகான்களுக்கு ஆச்சாரியராக விளங்கியவர்.


இத்திருக்கோயிலின் விமானத்திற்கு வட பக்கத்தில் உள்ள கல்வெட்டுகளால் இக்கோயிலின் பெயர் ‘பாடகம்’ என்றும், முதலாம் குலோத்துங்க சோழனால் இத்திருக்கோயில் புதுப்பிக்கப்பட்டது என்றும் தெரிய வருகிறது. மூலவர் பெருமாள் சுதையினால் செய்யப்பட்டுள்ளது மற்றொரு சிறப்பாகும்.

கிருஷ்ண ஜயந்தி, தீபாவளி, முக்கோட்டி ஏகாதசி, பங்குனி உத்திரம் முதலானவை இத்திருக்கோயில் விசேஷங்கள் ஆகும். ஆவணி மாதத்தில் கிருஷ்ணரின் வருகையான ஜன்மாஷ்டமி மிகவும் பயபக்தியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. தரிசன நேரம் காலை 7 மணி முதல் 11 மணி வரை. மாலை 4 மணி முதல் 7.30 மணி வரை.

இக்கோயிலில் அங்கப் பிரதட்சணம் செய்தால் தொற்று நோய் குணமாகும் என்று நம்பப்படுகிறது. அவரது சன்னிதியை சுற்றி வருவது 32 ஆயிரம் தெய்வங்களை வணங்குவதற்கு சமம் என்று நம்பப்படுகிறது. கிருஷ்ணர் ரோஹிணி நட்சத்திரத்தில் பிறந்ததால் அந்த நட்சத்திரக்காரர்கள் தங்கள் சிரமங்களில் இருந்து விடைபெற இக்கோயிலுக்கு வந்து வணங்குகின்றனர்!

மழை தரும் தெய்வமாக அருளும் ஜலகண்டேஸ்வர பெருமான்!

மழை தரும் தெய்வமாக அருளும் ஜலகண்டேஸ்வர பெருமான்!


மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்களது பக்தியை வெளிப்படுத்துவதற்காகவே போட்டி போட்டுக்கொண்டு கோயில்களை கட்டி சென்றுள்ளனர். பல வரலாறுகளை கடந்தும் பல இயற்கை சீற்றங்களை கடந்தும் இன்று வரை இந்தக் கோயில்கள் கம்பீரமாக நின்று வருகின்றன.

எத்தனையோ திருக்கோயில்கள் இதுபோல தமிழ்நாட்டில் ஆங்காங்கே பல காலங்கள் கடந்தும் கம்பீரமாக நின்று வருகின்றன. இதுபோன்ற சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கி வருகிறது கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில். மலை மீது அமைந்த இந்தத் திருக்கோயிலில் அருளும் சிவபெருமான் சந்திரசூடேஸ்வரர் எனவும் தாயார் மரகதாம்பிகை எனவும் அழைக்கப்படுகின்றனர்.

இந்தத் திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சந்திரசூடேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக காட்சி கொடுத்து வருகிறார். பிராகாரத்தில் அருளும் ஜலகண்டேஸ்வரர் லிங்கம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தண்ணீர் தொட்டிக்கு நடுவில் இந்த லிங்கம் வீற்றிருப்பது மிகவும் விசேஷமாகும்.


மழையில்லாத காலகட்டத்தில் இந்த லிங்கத்திற்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. லிங்கம் இருக்கக்கூடிய தண்ணீர் தொட்டியில் தண்ணீரை ஊற்றி மக்கள் 16 நாட்கள் தங்களது வேண்டுதல்களை வைத்து அந்த தெப்பக்குளத்தை நிரப்புகின்றனர். அடுத்த சில மணி நேரங்களில் அந்த குளத்தில் இருக்கக்கூடிய தண்ணீர் வற்றி விட்டால் மழை வராது என்று அர்த்தமாம். தண்ணீர் வடியாமல் அப்படியே குளம் போல தண்ணீர் நின்று கொண்டிருந்தால் சில நாட்களில் மழை வரும் என பக்தர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவத்தை நிரூபிக்கும் வகையில் சில வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற நடந்துள்ளதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

ஈசனை பிரிந்திருந்த பார்வதி தேவியைக் காண சிவபெருமான் உடும்பு ரூபம் கொண்டு வந்தபோது, அதனைப் பிடிக்க பார்வதி தேவி பின் தொடர்ந்து வந்துள்ளார். அனைத்து இடங்களையும் தாண்டி இந்தப் பகுதிக்கு சிவபெருமான் உடும்பு ரூபத்தில் வந்துள்ளார்.

அந்த சமயம் முத்கலர் மற்றும் உத்சாயனர் ஆகிய இரு முனிவர்களும் அங்கு தவம் இருந்துள்ளனர். உடும்பு ரூபத்தில் சிவபெருமான் வந்திருக்கிறார் என தங்களது ஞான திருஷ்டியில் இருவரும் கண்டு கொண்டனர். உடனே அந்த உடம்பை பிடிப்பதற்காக அதன் பின்னே சென்றுள்ளனர். அம்பாள் மற்றும் முனிவர்கள் இருவரிடத்திலும் சிக்காமல் சிவபெருமான் மறைந்து விட்டார்.


உடும்பு மறைந்ததைக் கண்டு கோபமடைந்த பார்வதி தேவி, அந்த முனிவர்களுக்கு சாபம் கொடுத்துள்ளார். இதனால் இருவரும் ஊமை மற்றும் செவிடாக மாறி விடுகின்றனர். அதே இடத்தில் பார்வதி தேவியும் தவமிருக்கத் தொடங்கியுள்ளார். அதுதான் இப்போது சந்திர சூடேஸ்வரர் திருக்கோயிலாக விளங்கி வருகிறது.

இக்கோயிலில் உள்ள அம்பாள் சன்னிதி முன்பு ஸ்ரீ சக்கரம் உள்ளது. அந்த ஸ்ரீ சக்கரம் முன்புதான் நவ சண்டி யாகம் ஆடி மாதத்தில் நடைபெறுகிறது. அம்பாள் முகத்தில் உள்ள மூக்கில் மூக்குத்தி நுழைய துவாரம் உள்ளது. அம்பாளின் பின்னல் தலை முடி, ஜடை குஞ்சத்தோடு இருக்கும். பஞ்சபாண்டவர்களில் அர்ஜுனன் சுவாமிக்கு அஷ்டகம் எழுதி பூஜை செய்ததாக சிறப்பு பெற்றது இத்திருக்கோயில். அம்மன் சிலை பச்சை நிறமாக இருப்பதும் கோயிலின் அதிசயங்களில் ஒன்று!

சீதையின் ஆசிர்வாதம்பெற்ற கயா ஆலமரம்*!

சீதையின் ஆசிர்வாதம்
பெற்ற கயா ஆலமரம்*!


ராமாயணம் கிளைக்கதைகள்

ராமர் வன வாசம் செய்த போது பித்ருக்களுக்கான சிரார்த்த தினம் வந்தது. 

உணவு தயாரிக்க உணவுப் பொருட்களை எடுக்க லட்சுமணர் காட்டிற்குள் சென்றான். 

லட்சுமணன் வருவதற்கு வெகு நேரமானது. 

ராமர் லட்சுமணனைத் தேடி காட்டிற்குள் கிளம்பினார். 

சிரார்த்த காலம் நெருங்கி விட்டது .

சீதை தவித்தாள். 

சிரார்த்தகாலம் தாண்டி விட்டால் பித்ருக்கள் சபிப்பார்களே என்று வருந்தினாள். 

அருகில் கிடைத்த சில பழங்களை பறித்து அக்கினியில் வேக 
வைத்தாள். 

அதைப் பிசைந்து பிண்டம் தயாரித்தாள். 

அப்போது அவள் முன்பு 
தேஜோ மயமாக பிதுர்க்கள் தோன்றினர். 

சீதை பிண்டத்தை எங்களுக்கு சமர்ப்பிக்கலாம். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம் என்றார்கள். 

உங்கள் வம்சத்தினர் சமர்ப்பிக்க வேண்டியதை 
நான் செய்யலாமா என்று 
சீதை தயங்கி நின்றாள். 

சிரார்த்த காலம் தவறி அசுர காலம் வந்து விடும். 

எனவே சாட்சி வைத்துக் கொண்டு கொடு தவறில்லை என்றார்கள் பித்ருக்கள். 

சரி என்று சீதையும் 
அங்கிருந்த பல்குனிநதி 
ஒரு பசு துளசிச்செடி மற்றும் ஆலமரம் ஆகியவற்றை சாட்சியாக வைத்துக்கொண்டு பிதுர்க்களுக்கு பிண்டம் தருகிறேன். 

என் கணவரிடம் இந்த நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டு 
பிண்டம் கொடுத்தாள். 

பிதுர்க்கள் பிண்டத்தை மகிழ்ச்சியோடு ஏற்று மறைந்தார்கள். 

ராம லட்சுமணர்கள் சிறிது நேரத்தில் தானியங்களோடு வந்தார்கள். 

சீதை சீக்கிரம் சமையல் செய்’ என்றார் ராமர். 

சீதை நடந்ததைக் கூறினாள். 

ராமர் திகைப்புடன் சாஸ்திரமாக சிரார்த்தம் நடத்தும் எங்கள் முன் வராத பிதுர்க்கள் உன் முன்தோன்றி நேரில் பிண்டம் வாங்கினர் என்பது கற்பனை’ என்றார். 

நான் உண்மையைத் தான் சொல்கிறேன்.

பல்குனி நதி பசு துளசிச்செடி மற்றும் ஆலமரம் ஆகியவற்றை சாட்சி வைத்துக் கொண்டேன். 

அவற்றிடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றாள் சீதை.

ராமர் சீதை சொல்வது போல் பிதுர்க்கள் நேரில் வந்து பிண்டம் வாங்கினாரா என்று கேட்டார். 

ஆலமரம் தவிர பல்குனி நதி 
பசு துளசிச்செடி எங்களுக்கு தெரியாது என்று சொல்லி விட்டன. 

ராமர் வருவதற்குள் சீதை சிரார்த்த காரியத்தை முடித்ததற்குத் தாங்கள் உடந்தையாக இருந்தோம் என்று ராமர் கோபிப்பாரோ 
என அவைகள் பயந்து தெரியாது என்று சொல்லி விட்டன. 

ராமரும் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சமையலை முடி நாங்கள் நீராடி வருகிறோம் என்று கூறிச்சென்றார். 

சீதை தன்னைக் கணவர் நம்பாததை எண்ணி துக்கத்தோடு சமையல் செய்தாள். 

ராமர் நீராடி வந்து சங்கல்பம் செய்து கொண்டு பிதுர்க்களை சிரார்த்த சாமான்களில் ஆவாஹனம் செய்யும் போது வானிலிருந்து அசரீரி ஒலித்தது. 

ராமா ஏன் இரண்டாம் முறையாக திதி கொடுக்க எங்களை அழைக்கிறாய்? 

சீதை கையால் பிண்டம் வாங்கி நாங்கள் திருப்தியுள்ளோம் என்றது அசரீரி. 

அதன் பின் ராமர் சமாதானமானார். 

அதன் பின் சாட்சி சொல்லாதவர்களை பார்த்த சீதை பல்குனி நதியே உன்னிடம் எந்தக் காலத்தும் வெள்ளம் தோன்றாது. 
தண்ணீர் வற்றியே காணப்படும் என்றாள். 

பசுவே உன் முகத்தில் வாசம் செய்த நான் இன்று முதல் உன் பின்பக்கத்துக்குப் போய் விடுவேன் என்றாள். 

இந்த கயாவில் எங்கும் துளசி வளராது போகட்டும் என்ற சீதை சாட்சி சொல்லாதவர்களுக்கு சாபமிட்டாள். 

ஆலமரம் தனக்கு சாட்சியாக நின்றதற்கு மகிழ்ந்து யுக யுகாந்திரங்கள் நீடுடி வாழ வாழ்த்தி யுக முடிவின் போது பிரளயத்தின் போது உனது இலையிலேயே பரமாத்மா குழந்தை வடிவில் 
தோன்றுவார். 

அவரது திருவடிகளில் உலகங்கள் அனைத்தும் லயமாகும் என்று அருளினாள். 

மேலும் கயாவில் சிரார்த்தம் செய்ய வருபவர்கள் ஆலமரத்தின் அடியில் பிண்டங்களை அர்ப்பணம் செய்வார்கள் .

அப்போது தான் கயாவில் சிரார்த்தம் செய்வதன் பலன் கிடைக்கும் என்றும் ஆசிர்வதித்தாள். 

இந்த சாபத்தின் விளைவால்தான் கயாவில் துளசி வளருவதே கிடையாது. 

மேலும் பல்குனி நதியும் வற்றிபோய் காட்சியளிக்கிறது.

என்றோ கடந்துபோன சம்பவங்களை நினைத்து சங்கடப்படுபவரா நீங்க?

என்றோ கடந்துபோன சம்பவங்களை நினைத்து சங்கடப்படுபவரா நீங்க?

உணவு குறித்த விழிப்புணர்வு தற்போது பெருகி வருவதைப்போல உணர்வுகளைப் பற்றிய கருத்து, கவலை மற்றும் கலாச்சாரம் இவைகளும் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாக மாறி வருகிறது. ஆம் இவைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிதான் நமது மன ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் முக்கியமாக வெற்றிக்கும் அவசியமாகிறது.

இந்த உணர்வு கலையை ஒரு தோட்டக்கலைக்கு ஈடாக ஒப்பிடலாம். காரணம் இது ஒரு அழகான தோட்டத்தை உருவாக்க, களைகளை பிடுங்கி சீர் செய்து நீர் பாய்ச்சி விலங்கினங்கள் நுழையாமல் பேணிக்காப்பது போல நமக்குள் ஊறும் உதவாக்கரை உணர்வுகளை வளரும் முன்னே கிள்ளி எறியவேண்டும். ஆரோக்கியமான நேர்மறை உணர்வுகளை வளரவிட வேண்டும்.

நமது உடலில் ஆரோக்கியத்தை பாதுகாக்க நாம் எவ்வளவு முன்னேற்பாடுகளுடன் தயாராகிறோம். அதே போல்தான் நமது உணர்வுகளை கையாளுவதற்கும் நமது முழு மனோசக்தியை உபயோகிக்க வேண்டும்.

ஏதோ ஒன்று நம்மை முடக்கி போட்டு விடுகிறது அது நமது முந்தைய தோல்விகளாகவும் இருக்கலாம் அல்லது மனம் வருந்த தக்க சம்பவங்களாகவும் இருக்கலாம். எதிர்பாராத இழப்பு தந்த சில விபத்துகள்கூட காரணமாக இருக்கலாம்.

தொடர் உடல் நலக்குறைவுகளும் சில சமயங்களில் காரணமாக இருந்திருக்கின்றன. இவை அனைத்தையும் கடந்து வரும் மனவலிமை இன்றி அதையே நினைத்து வருந்தினால் நமது செயல்திறன்தான் குறையும்.

நம் உணர்வுகள் சரியாக கையாளப்படாவிட்டால் அவைகளே நமது வாழ்க்கைக்கு வில்லன்களாக இருக்கக்கூடும் என்ற மனோவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த உணர்வுகளை கையாளுவதற்கான ஒரு அணுகுமுறை இங்கு. அதிர்ச்சிகளை தாங்கிக்கொள்ள மன வலிமையை அதிகரித்துக் கொள்ளுதல்தான் அது.

அதிர்ச்சியை தாங்கக்கூடிய முதல் சாதனம் வாழ்க்கையின் மீது நாம் கொண்டுள்ள ஒரு பார்வை அல்லது தத்துவம் ஆகும். தூரத்திலிருந்து ஒரு மலையை நாம் பார்க்கலாம். அது அழகான நீல நிறத்தில் வரையப்பட்ட ஒரு ஓவியம்போல வெண் பஞ்சு மேக கூட்டம் சூழ அட்டகாசமாக தெரியும். வெகு அருகே சென்று காணும்போது எங்கு பார்த்தாலும் ஒரே கூர்மையான பாறைகள் கையை வைத்தால் காயப்படுத்தும் வகையில் இருக்கும்.

இவை எல்லாம் தூரத்தில் இருந்து நம் கண்களுக்கு தெரிவதில்லை அப்பொழுது நம் கண்களுக்குபட்ட அழகு பொய்தானே.? வாழ்க்கையும் அதேபோலதான் தூரத்திலிருந்து பார்த்தால் வாழ்க்கை அழகாகத்தான் இருக்கிறது. சிறிய சிறிய கஷ்டங்களை பெரிதாக்கிக் கொள்ளாமல் ஒரு பெரும் அழகின் ஒரு மிகச்சிறு அங்கமாக கவனத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒன்றாக அந்த பழைய நினைவுகளை நாம் எடுத்துக்கொண்டு அதை அகற்றப் பழகுவோமே?

ரோஜா மலரின் முள்தானே அதனை இதழ்களின் மென்மையைக் கூட்டிக் காண்பிக்கிறது வாழ்க்கையின் மீது ஒரு அகன்ற பார்வை தேவை. அது பெரும்பாலான சமயங்களில் ஒரு ஆழ்ந்த அமைதியை தருகிறது. வாழ்க்கையின் பல கோணங்கள், எண்ணற்ற ருசிகள் வாழ்க்கையை நன்றாக சுவைக்க உதவுகின்றன. வாழ்க்கையை நன்றாகவே வாழ்ந்து காட்டுவதற்கு வைராக்கியம் தேவை.

அந்த வைராக்கியம் நமது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும். நமது பழைய நினைவுகளையும் அகற்றுவதில் இருந்தால் வெற்றிதான்.

கவனக்குறைவா? கவலை வேண்டாம்! GenZ இளைஞர்களுக்கான எளிய தீர்வுகள்!

கவனக்குறைவா? கவலை வேண்டாம்! GenZ இளைஞர்களுக்கான எளிய தீர்வுகள்!


இன்றைய காலக்கட்டத்தில், இளைஞர்களுக்கு கவனச்சிதறலும் கவனக்குறைவும் முக்கியமான பிரச்னைகளாக மாறி வருகின்றன. பள்ளி, கல்லூரி, அலுவலகம், பொது இடங்கள் என எங்கு சென்றாலும், ஏதேனும் ஒரு தருணத்தில் ஏற்படும் கவனக்குறைவால் தடுமாறி, சில சமயங்களில் சிரமங்களையும் எதிர்கொள்கின்றனர். இந்த நிலை அவர்களின் அன்றாட வாழ்க்கையையும், செயல்திறனையும் பெரிதும் பாதிக்கிறது. இந்நிலையில் ஒருவருக்கு ஏற்படும் கவனச்சிதறலுக்கான காரணங்களையும், அதனை எப்படி சமாளிப்பது என்பது பற்றியும் இங்கே வாசிக்கலாம்.

கவனச்சிதறலுக்கான சில முக்கிய காரணங்கள்

டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு:

ஸ்மார்ட்போன்கள், சமூக வலைத்தளங்கள், வீடியோ கேம்கள் போன்றவை இளைஞர்களின் நேரத்தை பெருமளவு பாதித்து, அவர்களின் கவனத்தை சிதறடிக்கின்றன. தொடர்ந்து வரும் அறிவிப்புகள், குறுஞ்செய்திகள், தகவல்கள் போன்றவை ஒரு பணியில் முழுமையாக ஈடுபட முடியாமல் தடுக்கின்றன.

 மன அழுத்தம் மற்றும் பதட்டம்:

படிப்பு, வேலை, எதிர்காலம் குறித்த கவலைகள், தனிப்பட்ட பிரச்னைகள் போன்றவை மன அழுத்தத்தையும், பதட்டத்தையும் உருவாக்குகின்றன. இதுவும் கவனச்சிதறலுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

தூக்கமின்மை:

போதிய தூக்கமின்மை மூளையின் செயல்பாட்டை பாதித்து, கவனம் செலுத்தும் திறனை குறைக்கிறது.

சமச்சீரற்ற உணவு:

ஆரோக்கியமற்ற உணவுகள், குறிப்பாக பாஸ்ட் புட்கள் அதிகமாக உட்கொள்வது, மூளையின் செயல்பாட்டிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கிடைக்க விடாமல் செய்து, கவனக்குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.

செயலில் தெளிவின்மை:

என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவான இலக்கு இல்லாத நிலையில், இளைஞர்கள் எளிதில் கவனச்சிதறலுக்கு ஆளாகின்றனர்.

கவனச்சிதறலை சமாளிப்பது எப்படி?

* டிஜிட்டல் பயன்பாட்டை கட்டுப்படுத்துங்கள்.

  * ஸ்மார்ட்போனில் அறிவிப்புகளை அணைத்து வையுங்கள்.

   சமூக வலைத்தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு செயலிகளுக்கு சிறிய நேரம் மட்டுமே ஒதுக்கி பயன்படுத்துங்கள்.

தூங்கும் முன் மற்றும் கண் விழித்த உடனடியாக மொபைலை தவிர்த்து, சிறிது நேரம் வேறு பணிகளில் கவனம் செலுத்துங்கள்.

* ஓர் இலக்கை நிர்ணயித்து செயல்படுங்கள்:

* ஒவ்வொரு நாளும் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுங்கள்.

* முக்கியமான பணிகளுக்கு முன்னுரிமை .

* சிறு சிறு இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைய முயற்சி செய்யுங்கள்.


ஒரு பணியில் கவனம் செலுத்துங்கள்

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முயற்சிப்பதை தவிருங்கள்.

ஒரு பணியை முடிக்கும் வரை, வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த வேண்டாம். ஒரே பணியில் முழு கவனத்துடன் ஈடுபடுவது உங்கள் செயல்திறனை மேம்படுத்துகிறது.

தியானம் மற்றும் யோகா பயிற்சி செய்யுங்கள்:

 * தினமும் சில நிமிடங்கள் தியானம் செய்வது மனதை ஒருமுகப்படுத்த உதவும்.

 * யோகா பயிற்சி மனதையும் உடலையும் சமநிலைப்படுத்தி, கவனத்தை மேம்படுத்தும்.

போதுமான தூக்கம் அவசியம்:

 தினமும் 7-8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம். இது மூளையின் செயல்பாட்டை சீராக்கி, கவனத்தை மேம்படுத்தும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம்:

   * சத்தான, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ், கீரைகள் போன்றவை மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.ஒரு பணியில் கவனம் செலுத்துங்கள்

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முயற்சிப்பதை தவிருங்கள்.

ஒரு பணியை முடிக்கும் வரை, வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த வேண்டாம். ஒரே பணியில் முழு கவனத்துடன் ஈடுபடுவது உங்கள் செயல்திறனை மேம்படுத்துகிறது.

தியானம் மற்றும் யோகா பயிற்சி செய்யுங்கள்:

 தினமும் சில நிமிடங்கள் தியானம் செய்வது மனதை ஒருமுகப்படுத்த உதவும்.

 யோகா பயிற்சி மனதையும் உடலையும் சமநிலைப்படுத்தி, கவனத்தை மேம்படுத்தும்.

போதுமான தூக்கம் அவசியம்:

 தினமும் 7-8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் அவசியம். இது மூளையின் செயல்பாட்டை சீராக்கி, கவனத்தை மேம்படுத்தும்.

ஆரோக்கியமான உணவுப் பழக்கம்:

   சத்தான, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுங்கள். குறிப்பாக, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ், கீரைகள் போன்றவை மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.


இடைவெளிகளை எடுத்துக்கொள்ளுங்கள்:

* தொடர்ந்து ஒரு வேலையை செய்யாமல், குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை சிறு சிறு இடைவெளிகள் எடுத்துக்கொள்ளுங்கள்.

* இது சோர்வை குறைத்து, புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவும்.

கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்:

   புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது, புதிய திறமைகளை வளர்த்துக்கொள்வது போன்றவை மூளையை சுறுசுறுப்பாக வைத்து, கவனத்தை மேம்படுத்தும். கவனச்சிதறல் என்பது பலருக்கும் ஏற்படும் இயல்பு நிலை. ஆனால் அதை சரியான முறையில் அணுகினால் கட்டுப்படுத்த முடியும். மேற்படி கூறிய வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றினால், உங்கள் கவனத்தை உயர்த்தி, தெளிவாக சிந்திக்கவும் முடிவுகளை நன்கு எடுக்கவும் உதவும். தெளிவான சிந்தனை இருந்தால், நீங்கள் எதை செய்தாலும் சிறப்பாக செய்யலாம். எனவே, நம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். தெளிவான சிந்தனை இருந்தால் வெற்றி நிச்சயமாக உங்களுக்கே.

உங்களைப் பிடிக்காதவர்களைப் பற்றி நீங்க ஏன் கவலைப்படனும்?

உங்களைப் பிடிக்காதவர்களைப் பற்றி நீங்க ஏன் கவலைப்படனும்?

உங்கள் உடன் பணிபுரிவோர், அக்கம் பக்கத்தில் வசிப்போர், உறவினர் மற்றும் நண்பர்கள் என பல தரப்பட்ட மனிதர்களுடன் நீங்கள் பழகிவருவீர்கள். அவர்களுள் ஒரு சிலருக்கு உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். அதற்காக நீங்கள் வருத்தப்படாமல், அவர்களை எவ்வாறு கையாள்வது என்பதற்கான சில ஆலோசனைகளை இப்பதிவில் பார்க்கலாம்.

உங்கள் மீது காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்பையும் காட்டுபவர்கள் பொதுவாக தன்மீதுள்ள வெறுப்பையும், தனக்கு ஏற்பட்ட முன் அனுபவங்களையும் பாதுகாப்பின்மையையும் முன்னிறுத்தவே அதைப் பிறர் மீது காண்பிப்பார்கள்.

எனவே அதை நீங்கள் சிறிதும் கண்டுகொள்ளாமல் விலகியிருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவர்களின் எதிர்மறையான செயல்களை நீங்கள் உள் வாங்கிக்கொள்ளாமல் இருப்பது உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்பாட்டில் வைக்கவும், எந்தவிதமான எதிர்வினையாற்றும் எண்ணத்தை மாற்றியமைக்கவும் உதவும்.

பிறரின் எதிர்மறையான செயல்கள் உங்களின் சக்தியை குறையச் செய்வதாயிருப்பின், அதற்கு நீங்கள் ஒரு வலுவான எல்லைக் கோட்டை அமைத்துக்கொள்வது சிறப்பு. அப்போது, அவர்களின் ஒவ்வொரு முடிவில்லா விவாதங்களிலும் நீங்கள் பங்கேற்க வேண்டிய தேவை இருக்காது. அமைதியான முறையில், ஓர் இடைவெளியை உண்டுபண்ணிக் கொண்டு, தேவையின்றி எதிர்வினையாற்றாமல் இருப்பதே விஷமிகளைக் கையாள்வதற்கான சிறந்த வழி. இதனால் உங்கள் நிம்மதியும் பறிபோகாது.

மற்றவரின் எதிர்மறை எண்ணங்களும் வெறுப்பும் உங்களை அவர்கள் அளவுக்கு தாழ்ந்து போய்விட ஒரு போதும் அனுமதிக்க வேண்டாம். அமைதியாகவும் அன்போடும் சூழ்நிலையை கையாளும்போது, அது உங்கள் பலத்தையும், அறிவு முதிர்வையும் கட்டுப்பாடான உணர்வுகளையும் வெளிப்படுத்தும். இதற்குப் பின்னும் அவர்கள் நடத்தையில் மாற்றம் வரவில்லையெனில், உங்கள் கொள்கைகளை வலுவாகப் பற்றிக்கொண்டு அவ்விடத்தை விட்டு விலகி விடுங்க.

ஒருவர் உங்கள் மீது வெறுப்பைக் கொட்டிக்கொண்டே இருக்கும்போது, அதை மனதில் வைக்கவே வேண்டாம். அதே நேரம் உங்கள் மீது உண்மையான அன்பையும் கவனிப்பையும் செலுத்தும் நபர்களுடன் அதிக நேரம் செலவிட தயங்காதீர்கள். இது உங்கள் மதிப்பை உயர்த்தவும், உங்கள் முன்னேற்றத்திற்கு வழி காட்டவும் உதவும்.

வாழ்க்கைப் பயணம் மிக நீண்டது. நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களை விரும்பியே ஆகவேண்டுமென்ற கட்டாயமில்லை. இதைப் புரிந்துகொண்டு, விஷமிகளை விட்டு விலகி இருப்பதே நிம்மதியான வாழ்வுக்கு வழி. இதனால் நீங்கள் தோற்று விட்டதாக அர்த்தமில்லை. நீங்கள் நடிப்பதைத் தவிர்த்து வாழ்க்கைக்கு மிக முக்கியத் தேவையான அமைதியைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என அர்த்தமாகும்.

ஊக்கப்படுத்துவது (மோட்டிவேஷன்) என்பது பிறவிக் குணமல்ல!

ஊக்கப்படுத்துவது (மோட்டிவேஷன்) என்பது பிறவிக் குணமல்ல!

மோட்டிவேஷன் என்றால் ஒரு நபரினுடைய செயல்களுக்குப் பின்னால் இருக்கும் உள் தூண்டுதலாகும். இது ஒரு செயலை தொடங்குவதற்கும், அதைத் தொடர்வதற்கும் அத்துடன் விடாமுயற்சியுடன் இலக்குகளை அடைவதற்கும் ஊக்குவிப்பை அதாவது தூண்டுதலை கொடுக்கும் ஒரு உளவியல் சக்தியாகும். மோட்டிவேஷன் என்பது ஒருவருடைய செயல்களின் திசையை நிர்ணயிக்கிறது. ஒரு செயலை தொடர் வதற்கும், அதைத் தொடரவேண்டிய அவசியம் மற்றும் தடைகளை எதிர்கொள்ளும்பொழுது நிலைத்தன்மையை வெளிப்படுத்துவதற்கும் உதவுகிறது.

மோட்டிவேஷன் என்பது உள் உந்துதல். அதாவது உள்ளிருந்து வரும் ஒரு ஆசை அல்லது விருப்பம் எனக்கொள்ளலாம். இது ஒரு இலக்கை அடைவதற்கான விடாமுயற்சியை ஊக்குவிக்கிறது. ஒரு செயலைத் தொடங்கவும், தொடரவும் தூண்டுகிறது. உதாரணத்திற்கு ஒரு மாணவன் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதிக்க வேண்டும் என்று எண்ணினால் அது அவனது மோட்டிவேஷனாகும்.

அந்த உந்துதலே அவனைப் படிக்க தூண்டும். விடாமுயற்சியுடன் படிக்க வைத்து சாதிக்கத் தூண்டும். கடைசியில் அந்த மோட்டிவேஷனானது தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற உதவும்.

பிறரை ஊக்கப்படுத்துவது அதாவது மோட்டிவேஷன் என்பது பிறவி குணம் அல்ல; அது ஒரு திறன், அதை வளர்க்கலாம். தன்னம்பிக்கை, தன்மதிப்பு போன்ற குணங்கள் மோட்டிவேஷனை அதிகரிக்கின்றன. ஆனால் அவை பிறவியுடன் வருவதில்லை; அவற்றை நாம் தான் வளர்த்துக்கொள்ளதான் வேண்டும். ஒரு காரியத்தை செய்ய உந்துதல், அதாவது தூண்டுதல் பிறவியுடன் சேர்ந்து வருவதில்லை; தேர்ந்த பயிற்சி மூலம்தான் அதனை வளர்த்துக்கொள்ள முடியும்.

தன்னம்பிக்கையும், தன் மதிப்பும் மோட்டிவேஷனை அதிகரிக்க உதவும்; ஆனால் இவையும் பிறவியுடன் சேர்ந்து வருவதில்லை. இவற்றையும் தேர்ந்த பயிற்சி மூலம் தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை மற்றும் தன் மதிப்பு போன்ற குணங்களை செழுமைப்படுத்தி வளர்த்துக்கொள்ள நல்ல அனுபவங்களும், சாதனை மற்றும் சுயபரிசோதனை போன்ற செயல்களும் உதவுகின்றன.

ஒரு நல்ல செயலை செய்யும்போது அதற்கான பாராட்டைப் பெறுவோம். அந்த பாராட்டைப் பெறும்போது அது நம்மை மேலும் மோட்டிவேட் செய்து சாதிக்க வைக்கும். மோட்டிவேஷன் என்பது பிறவி குணம் அல்ல. அது ஒரு திறன். அதை நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும்.

தெரிந்தே செய்யும் தவறுகள் மன்னிக்க முடியாதவை!

தெரிந்தே செய்யும் தவறுகள் மன்னிக்க முடியாதவை!

நேற்று செய்த தவறை ஒப்புக்கொண்டால் இன்று நீ அறிவாளியாவாய் - இது சாரதா தேவியார் கூறியது.

தவறுகள் செய்யாத மனிதர்களே இல்லை. சிலர் அவர்களையும் அறியாமல் செய்யும் தவறுகளை மன்னித்துவிடலாம். தவறுதான் என்று தெரிந்தும். தவறு செய்பவர்களை மன்னிக்கவே முடியாது.

தவறு செய்யாமல் வாழமுடியாதா? எதற்காகத் தவறு செய்ய வேண்டும்! அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இப்படித் தனக்குள்ளே கேள்விகள் கேட்டு உணர்ந்து கொண்டவர்கள் மட்டுமே தவறுகளைச் செய்ய அஞ்சுவார்கள்.

தவறு செய்யப்பயப்படுபவர்கள் கோழைகள் அல்ல. அவர்கள்தான் சிறந்த மனிதர்கள் ஆவார்.

எதற்கெடுத்தாலும் தவறு செய்யும் மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியாது. தற்சமயம் வேண்டுமானால் மகிழ்ச்சிக் கடலில் நீந்தலாம். பிறகு அதிலேயே மூழ்கிக் காணாமல் போய்விடுவார்கள்.


தவறு செய்துவிட்டு மனசாட்சிக்குப் பயந்து பாவமன்னிப்புக் கேட்பவர்கள் மன்னிக்கப்படுவார்கள். ஆனால் மன்னிப்பு கேட்டு விட்டோம். இனிமேல் என்ன என்று தொடர்ந்து தவறு செய்பவர்களும் இருக்கிறார்கள்.

ஒருவன் மது குடிக்கிறான். அளவுக்கு அதிகமாகவே குடித்துவிடுகிறான். போதையில் தள்ளாடுகிறான். தெருவில் வந்து தைரியசாலி போல் வீரவசனம் பேசுகிறான். அவன் அப்படி நடந்து கொள்வது அவனுக்கு வேண்டுமானால் அழகாய் இருக்கலாம்.

ஆனால், அனைவரும் அவனை அருவருப்பாகத்தான் பார்ப்பார்கள். அந்தப் போதை அவனின் பாதையை மாற்றிவிடும்.


நல்ல சிந்தனை, நல்ல செயல்களைச் செய்பவர்களுடன் சேரவேண்டும். அப்பொழுதுதான் உயர்ந்த சிந்தனையும். செயலும் பிறக்கும்.

எத்தனை காலம்தான் வெள்ளையனுக்கு நாம் அடிமையாகவே இருப்பது. நாமும் சுதந்திரக் காற்றைவாசிக்க வேண்டும் என்று எழுந்த உணர்வுதான் சுதந்திரம் ஆகும்.

வாழ்க்கை முழுவதும் எதற்கும் அடிமையாகவே வாழவேண்டுமா. மனிதன் பிறக்கும்போது. எதற்கும் யாருக்கும் அடிமையாகப் பிறப்பதே இல்லை.

தவறுகளைத் தெரிந்தே பழகிக்கொள்கிறான். பின் மீளாத் துயரில் விழுந்து விடுகிறான். அவனால் ஒதுங்கிச் செல்லமுடியும். அத் தவறுகளில் இருந்து மீண்டு வெளியே வரமுடியும்.

அதற்கு அவன் முயற்சி செய்யவேண்டும். எந்த முயற்சியும் செய்யாமல், தம்மைத் திருத்திக்கொள்ளவே முடியாது.


செய்யும் தவறுகளைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது! அதில் இருந்து வெளியே வரவேண்டும் என்ற முயற்சியும் வேண்டும். தவறு எனத் தெரிந்தே செய்வதை உடனே நிறுத்தி விடவேண்டும்.

மெல்ல நிறுத்துவது என்பது முடியாத செயலாகும். அது ஒரு வகை நொண்டிச் சமாதானம் ஆகும். இப்படிப்பட்ட உள்ளம் முழுமையாய் அதில் இருந்து வெளியே வரவே முடியாது.

இப்படித் தொடர்ந்து வெளியே வரத்துடிக்கும் எண்ணத்துடன், அவற்றிற்கு அடிமையாகவும் இருப்பதை என்னவென்று சொல்வது.

இதேபோல் சாலை விதிகளைக் கடைப்பிடித்துச் செல்லவேண்டும் எனத் தனக்குள் நினைப்புது உண்டு. ஆனால் சில நேரங்களில், சாலை விதிகளைக் கடைப்பிடித்துச் செல்வது இல்லை.


ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிக்கும் செயலையும் தெரிந்தே செய்து கொண்டிருக்கிறோம். தெருவில் குப்பைகளைக் கொட்டி துர்நாற்றம் வீசச் செய்கிறோம். கண்டபடி சிறுநீர் கழித்தும், மலம் கழித்தும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். இதனால் பொது மக்களின் சுகாதாரம் பாதிக்கும் என்பதெல்லாம் தெரிந்தும், தொடர்ந்து செய்கின்ற தவறுகள்தானே!

இதற்காகவெல்லாம் அரசாங்கம், தனித்தனியே அழைத்து மக்களுக்கு அறிவுரை சொல்லமுடியாது.

அனைவரும் தம்மைத் திருந்திக்கொண்டாலே போதும் தவறுகளும் திருத்தப்படும். அதற்குண்டான ஞானத்தெளிவும் பிறக்கும்.

அன்பால் இணைவோம் அலுவலக உறவில்!

அன்பால் இணைவோம் அலுவலக உறவில்!

பணி செய்யும் இடத்தில், மேலதிகாரிகள், உடன் பணிபுரியும் சக ஊழியர்கள், கீழே பணிபுரியும் நபர்கள் என எல்லோருடனும் நல்லுறவு இல்லாமல் போனால், நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது. இங்கு ஏற்படும் மனஉளைச்சல், வீட்டிலும் மன அழுத்தம் அதிகம் ஆகும். உங்கள் உயர் அதிகாரிகளிடம் மரியாதை, சக ஊழியர்களிடம் மதிப்பு கீழே பணிபுரியும் மற்றவர்களிடம் நம்பிக்கை என எல்லாம் பெற நீங்கள் என்ன செய்யலாம்? செய்யவேண்டும்?

அன்பாய் சொல்லுங்கள்

அடுத்தவர்கள், வேலையில் தவறு செய்யலாம் அல்லது ஒருவரின் நடவடிக்கையே அலுவலகத்தில் இயல்பை குலைப்பதாக இருக்கலாம். அதை சுட்டிக்காட்டுமிடத்தில் நீங்கள் இருந்தாலும், பலர் முன்னிலையில் கடிந்து பேசாதீர்கள். அது அவரின் சுயமரியாதையை நொறுங்கச் செய்துவிடும். சரியாக செய்ய கற்றுக்கொடுங்கள். அவர் செய்த தவறுகளை கண்டிப்பு கலந்த அன்போடு புரியும் படி சொல்லுங்கள்.


உண்மையைக் கண்டறியுங்கள்

பெறும்பாலான அலுவலக உறவுகள் சீர்குலைந்து போவது தவறான யூகங்களால்தான். ஒரு தோல்விக்கு ஒரு கான்ட்ராக்ட் கிடைக்காமல் போனதற்கு, ஒரு வியாபாரத்தில் நஷ்டம் வந்ததற்கு அலுவலக ரகசியம் ஒன்று கசிந்ததற்கு, இவர்தான் காரணம் என ஆதாரம் இல்லாமல் யாரையும் சுட்டிக்காட்டவோ, தண்டிக்கவோ செய்யாதீர்கள். திறந்த மனதோடு பேசும் உண்மையை கண்டறிங்கள். உண்மையில்லாத எந்த விஷயத்தையும் அடுத்தவர்களிடம் பேசாதீர்கள்.

அடுத்தவர்களுக்கும் கற்றுக்கொடுங்கள்

உங்களுக்கு சம்பந்தமில்லாத வெற்றிக்கு நீங்கள் உரிமை கொண்டாடாதீர்கள். உங்களால் நிகழ்ந்த ஒரு பிரச்னைக்கு, அடுத்தவர்கள் மீது பழிபோட்டு தப்பிக்கவும் செய்யாதீர்கள். தவறுகளை ஒப்புக்கொண்டு அடுத்தமுறை அதை சரி செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கும் கற்றுக்கொடுங்கள்.


ஒதுங்கி இருங்கள்

எல்லா இடங்களிலும் யாராவது ஓரிருவர் பிரச்னை செய்பவர்களாகவோ, அடுத்தவர்களிடம் வீண் வம்புக்கு போகிறவர்களாகவோ, இருப்பார்கள். இதுதான் துணிச்சல் என அவர்களாகவே தங்களைப்பற்றி பெருமையாக நினைத்து கொள்வார்கள். அப்படிப்பட்ட நபர்களிடம் இருந்து ஒதுங்கி இருங்கள். நீங்கள் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான உதாரணமாக அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.

உழைப்பை பாராட்டுங்கள்

கடினமாக உழைப்பது மட்டுமே முக்கியம் இல்லை ஒரு அலுவலகம் அல்லது தொழில் நிறுவனம் என்பது பலரின் கூட்டு முயற்ச்சி தேவைப்படும் இடம். அடுத்தவர்களோடு நன்கு பேசி உறவாடுவது மட்டுமே கூட்டு முயற்சியை சாத்தியமாக்கும். அடுத்தவர்களுடன் பேசி உழைப்பையும் பாராட்டுங்கள். அதுவே உங்களை அவர்களோடு நெருக்கமாக்கும்.

கருத்தைச் சொல்லுங்கள்

இன்னொருவர் பேசும்போது குறுக்கிடாதீர்கள். அதற்காக மௌனமாகவும் இருக்காதீர்கள். ஆமாம், சரி, என்பது போன்ற வார்த்தைகளை சொல்லி அவர்களை பேசதூண்டுங்கள். அவர்கள் பேசி முடித்த பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள் பேசுவது மட்டும் அல்ல கேட்பதும் கவனிப்பதும் கூட தகவல் தொடர்பில் முக்கியமானவை.

தட்டிக்கொடுங்கள்

யாரைப் பற்றியும் பின்னால் பேசாதீர்கள். அடுத்தவர்களின் முதுகுக்குப் பின்னால் நீங்கள் செய்ய வேண்டியது அவர்களை தட்டி கொடுப்பது மட்டுமே! வீண் வம்பு பேசாதவர் என பெயர் எடுங்கள். எல்லோரும் நன்றியோடு உங்களிடம் பழகுவார்கள்.

அலுவலகம் முன்னேறும் போது நீங்களும் முன்னேற்றம் பெற போகிறீர்கள். இதைச் சக ஊழியர்களுடன் பேசி அவர்களுக்கு உற்சாகம் அளிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.


சுக துக்கங்களில் பங்கெடுங்கள்

ஆபீஸ் பழக்கம் ஆபிஸோடு மட்டும்தான் என்று கறாராகக் கத்திரித்து கொள்ளாதீர்கள். அலுவலக நண்பர்களின் சுக துக்கங்களில் பங்கெடுங்கள். நெருங்கிய உறவுகளை விட இவர்களே உங்கள் வாழ்க்கையில் நிரம்பி இருக்கிறார்கள். தினம் நீங்கள் அவர்களோடுதான் இருக்கிறீர்கள், என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சுக துக்கங்களில் உங்களோடு இருக்கப் போவதும் அவர்களே என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இதனால் வாரம் முழுக்க நாம் பெரும்பாலான நேரத்தை செலவிடுவது பணி செய்யும் அலுவலகம் அல்லது தொழில் செய்யும் நிறுவனத்தில்தான் சொல்லப்போனால் சிலர் விழித்திருக்கும் நேரத்தில் பெரும்பாலும் பகுதியை செலவிடுவது இங்குதான்! அலுவலகத்தில் அலுவலக உறவுகளோடு அன்பால் இணைந்து பணியாற்றினால் அலுவலக உறவில் மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சியோடு இருக்கலாம்.

சனி, 19 ஜூலை, 2025

வாழ்க்கை சிறக்க சில எளிய விஷயங்கள்..

வாழ்க்கை சிறக்க சில எளிய விஷயங்கள்..


வாழ்க்கை சிறக்க அந்தந்த தருணத்திற்கு ஏற்றபடி உணர்வுபூர்வமாக முழுமையான விழிப்புணர்வுடன் வாழ்வதுதான் சிறந்தது. நம்மிடம் இல்லாத ஒன்று பிறரிடம் இருப்பதைக் கண்டால் பொறாமை கொள்வதும், அதனை அடைந்தே தீரவேண்டும் என்று போராடுவதும் வாழ்வில் நிம்மதியை தொலைக்கும் விஷயங்கள். எனவே மற்றொருவருடன் ஒப்பிட்டு பார்த்து வேதனைப்படுவதை தவிர்க்க வேண்டும். ஒப்பிடுவதால்தான் போட்டி பொறாமை எல்லாம் உருவாகிறது. இந்த வேண்டாத எண்ணங்களை மனதிலிருந்து நீக்கிவிட வாழ்வு நிச்சயம் சிறக்கும்.

வாழ்க்கை சிறக்க பல விஷயங்கள் முக்கியம். உடல் நலம், மனநலம், நம்மைச் சூழ்ந்த உறவுகள் என பல அம்சங்கள் வாழ்க்கையில் நன்கு அமைய வேண்டும். உடலுக்குத் தேவையான சத்துள்ள ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதும், போதுமான உறக்கம் மற்றும் உடற்பயிற்சி செய்வதும் உடல் நலத்தை மேம்படுத்த உதவும். உடலுக்கும் மனதிற்கும் சம்பந்தம் உண்டு என்பதால் உடலை பேணிக் காக்க மனமும் சிறப்பாக செயல்படும். இதற்கு தியானம் மூச்சுப் பயிற்சி போன்றவை உதவும்.


எப்பொழுதும் நல்ல எண்ணம் கொண்டு நேர்மறையாக சிந்திப்பதும், பிறர் மனம் புண்படாதவாறு நடந்து கொள்வதும், பிறரை மதிக்க கற்றுக் கொள்வது போன்ற நல்ல குணங்களை வளர்த்துக் கொள்வதும் வாழ்க்கை சிறப்பாக இருக்க உதவும். திறமைகளை வளர்த்துக் கொள்வதும், ஆன்மீக சிந்தனைகள், நல்ல செயல்கள், தியானம், வழிபாடு போன்றவை வாழ்வில் ஒரு நல்ல சமநிலையை ஏற்படுத்தி மன அமைதியைத்தரும். வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வு, சூழ்நிலைகளை உணர்ந்து செயல்படுவது போன்றவை நம் வாழ்க்கையை செம்மையாக்கும்.

ஈதலும் இசை பட வாழ்தலும்' - வறியவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் புகழ்பெற்று வாழ்வதே வாழ்க்கை என்று வள்ளுவப் பெருமான் கூறுகிறார். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் சூழ்நிலையைப் பொறுத்து வாழும் வாழ்க்கைதான் சிறந்த வாழ்க்கை. ஒரே சூழலில் ஒரே இடத்தில் இருக்கும் அனைவரும் ஒரே உணர்வுடன் இருப்பதில்லை, ஒரே சூழ்நிலையிலும் இருப்பதில்லை என்பதை உணரவேண்டும்.

மனம் மகிழ்ச்சியாக இருக்க நல்ல உறவுகள் அமைவதும், பிரச்னைகளை சமாளிக்கும் திறன் பெற்றிருப்பதும் வாழ்வு சிறக்க மிகவும் அவசியம். பிறருக்கு துன்பம் தராமல் நம் விருப்பப்படி வாழ்வதே சிறந்த வாழ்க்கை. கடமையை செய்யத்தான் வேண்டும். அதற்காக நம் சந்தோஷங்களை இழக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பது ஒரு வாழ்க்கை அதை அனுபவித்து வாழ்வோமே!

சிறப்பான வாழ்வு என்பது நம்முடைய மனதை எது நிறைவு செய்யுமோ அதுவே ஆகும். அவரவர்க்கு அதுவே செல்வம். அதனை அடைவதே சிறப்பு. மனநிறைவு ஒன்றே வாழ்வு சிறக்க வழிவகுக்கும். வாழ்க்கை என்பது ஒரு அழகான பயணம். அதில் நாம் நிற்காமல் முன்னேறி போய்க்கொண்டே இருக்கவேண்டும். உலகில் சிறந்த வாழ்க்கை என்பது அவரவர் மனதிற்கு பிடித்த மாதிரி நல்ல முறையில் வாழ்வதே ஆகும்.

காலம் கடந்து வரும் அறிவு பயனற்றது!

காலம் கடந்து வரும் அறிவு பயனற்றது!


மனிதர்கள் சிலருக்குக் காலம் கடந்து அறிவு வரும்! அதுவரை அவர்கள் எதைச் செய்தாலும் நல்லதுதான் என நினைப்பார்கள். அதனால் உண்டாகும் பாதிப்பினையும் உணர்வது இல்லை.

எதுவுமே தனக்கு என்று வரும் போதுதான் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். இதுதான் காலம் கடந்த ஞானம் ஆகும். ஏற்கனவே ஒரு செயலில்பட்டு உணர்ந்தவர்கள். தம் அனுபவத்தில் வேண்டாம் என அறிவுரை கூறினாலும் காதில் வாங்கிக் கொள்ளமாட்டார்கள்.

எதையும் அனுபவித்து அறிந்து உணர்ந்த பின்னரே ஞானம் உண்டாகும். தீமை விளைவிக்கும் பழக்கங்களை கைப்பிடிக்க வேண்டாம், விட்டுவிடுங்கள் என்று கூறினால் கேட்பது இல்லை.

தீமை விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும் அச்சிற்றின்பத்திற்கு அடிமை ஆகிவிடுகின்றனர். ஆரம்பத்தில் அப்பழக்கம் ஆனந்தம் தந்தாலும், தொடர்ந்து அது அவனை அடிமைப்படுத்திவிடுகிறது.

ஆரம்ப காலத்தில் தீமை அறியாமல், செய்யும் தவறுகளைத் தொடர்ந்து செய்யக்கூடாது. நம்மை நாம் திருத்திக்கொள்ள வேண்டும்.

எந்தக் கெட்டபழக்கத்தில் இருந்தும் நம்மால் மீண்டு வெளியே வரமுடியும். அது ஒன்றும் இமாலய சாதனை இல்லை.

தீயபழக்கங்களின் அடிமையாக இருந்து, உடல்நலம் சீர்கேடு அடைந்தபின். இந்தப் பழக்கத்தை விட்டால்தான் உயிர் வாழ முடியும். என மருத்துவர்கள் சொன்னால்தான் தெளிவாவார்கள்.

அதுவரை அவர்கள் மனம் தெளியாது. உயிர்வாழ வேண்டும் அதுவும் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்ற ஆசை முன்னரே வரவேண்டும்.

நமக்காக நம் குடும்பம் நம்பி உள்ளது. எனவே, அவர்களுக்காக வாழ வேண்டும் என ஆசைப்பட வேண்டும். அப்படி ஆசைப்பட்டால் மட்டும் போதுமா!

வயதான சிலர் கல்விப் பருவம் தாண்டிய பின், அதை நினைத்து வருத்தப்படுகிறார்கள். அப்பொழுதே ஒழுங்காக படித்து இருந்தால், இப்பொழுது நல்ல வேலை வாய்ப்புடன் மகிழ்ச்சியுடன் வாழலாமே. இப்படிக்கிடந்து கஷ்டப்படவேண்டிய நிலை வந்திருக்காதே என்று நினைப்பார்.

அவர்களுக்கு அனைத்து வசதிகளும் இருந்தும் நன்கு படிக்காமல் கோட்டைவிட்டு இருப்பார்கள். அதை நினைத்து இப்பொழுது என்ன செய்வது.

படிக்கும் பருவம் என்ன திரும்பவும் வரவா போகிறது.

இதே போல்தான் விவசாயம் மற்ற தொழில்கள் என பலவற்றிலும் அக்கறையுடன், பார்க்காமல் இருந்துவிட்டு பின்னர் கவலைப்பட்டு என்ன செய்வுது.

காலம் கடந்து வரும் ஞானத்தால் என்ன செய்ய முடியும். சென்ற காலங்கள் திரும்பவும் வராதே

எதையும் உரிய காலத்தில் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். அந்தப் பலனையும் முழுமையாய் அனுபவிக்க முடியும்.

ஆரம்ப காலத்தில் அனுபவத்தில் பெரியவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்று நடக்கவேண்டும். எதிர்கால வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என ஆசைப் படுகிறோம். அப்படி ஆசைப்பட்டால் மட்டும் போதாது. அதற்கான நிலையை அடைய, ஆரம்பத்திலேயே ஆரோக்கியமான வழியை தேர்ந்தெடுக்கவேண்டும். பின் அதன்படி நடக்கவும் வேண்டும்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவன். வகுப்பில் முதல் மாணவனாகத் திகழ ஆசைப்படுகிறான். அதற்காக அவன் கவனமாகப் படித்து உழைக்கவேண்டும்.

படிக்க வேண்டிய காலத்தில் படிக்காமல், விளையாட்டினால் கவனம் செலுத்தக்கூடாது. பிறகு எப்படி, அவன் அதிக மதிப்பெண்கள் பெற முடியும், வகுப்பில் முதல் மாணவனாக வரமுடியும்?

இப்படி எந்தத் துறையிலும் முழுக் கவனத்தைச் செலுத்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும். கவனத்தைச் சிதறவிட்டுவிட்டு, பின்னால் வருந்துவதில் இலாபம் இல்லை.

நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். நம் வாழ்க்கை நல்ல முறையில் அமைத்துக் கொள்ளவேண்டும். என்ற தெளிவான சிந்தனை பிறக்கவேண்டும். எதையும் வருமுன் காக்கத் தெரியவேண்டும்.

பொறுமையே மிகச் சிறந்த கொடை!

பொறுமையே மிகச் சிறந்த கொடை!

பொறுமை என்பது ஒரு செயலை துணிந்து செய்யவோ அல்லது சூழ்நிலைகளை சமாளிக்கவோ, கோபப்படாத நிலையில் அமைதியாய் இருப்பதை குறிக்கும். இது ஒரு நல்ல மனநிலை. இது வாழ்வில் பல நன்மைகளை பெற்றுத் தரும். பொறுமையாக இருப்பது மனநலத்தையும் உடல் நலத்தையும் காக்கும். எதிர்மறை எண்ணங்களை கட்டுப்படுத்தி மனதை அமைதியுடன் வைத்திருக்க உதவும். "பொறுமை கடலினும் பெரிது" என்பது வள்ளுவர் கூற்று.

பொறுமையாக இருப்பது என்பது மிகச்சிறந்த கொடையாகும். இந்த குணம் உடையவர்களை அனைவரும் விரும்புவார்கள். கோபம் மற்றும் பொறாமை மனிதர்களுக்கு முதல் எதிரி. நாம் எதிர்பார்த்தது எதிர்பார்த்த நேரத்தில், எதிர்பார்த்த வகையில் நடைபெறாவிட்டால் ஆத்திரப்படுகிறோம்;

பொறுமை இழக்கிறோம். நம்மை ஒருவர் அவமதித்தாலோ அல்லது தீமை செய்தாலோ பொறுமை இழந்து அவர்களுக்கு தீமை செய்யத்துடிக்கிறோம். பொறுமை உள்ளவர்கள் கடினமான சூழ்நிலைகளிலும், பிரச்னைகள் ஏற்படும் பொழுதும் அமைதி காத்து பொறுமையாக பிரச்னைகளை சமாளிப்பார்கள்.

பொறையுடைமை என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் பொறுமையின் சிறப்பையும், பொறுமையோடு இருப்பதினால் வரும் நன்மைகளையும் குறிப்பிடுகிறார்.

 'அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வாரை பொறுத்தல் தலை' - தம்மை அகழ்வாரையும் வீழ்ந்து விடாமல் நிலம் காப்பாற்றுகிறது. அதுபோல் தம்மை அவமதித்து இகழ்வாரையும் பொறுத்துக் கொள்ளுதல் மிகச்சிறந்த பண்பு என்று பொறுமையின் பெருமையை போற்றுகிறார்.


பொறுமை என்பது துன்பம் ஏற்படும் பொழுது உணர்ச்சிவசப்படாமல், கோபம் கொள்ளாமல் இருக்கும் மனநிலையாகும். மற்றவர் இகழும் பொழுதும், தாமதங்கள் ஏற்படும் பொழுதும், பிரச்சனைகள் உருவாகும் பொழுதும், தொடர்ந்து துன்பங்கள் வரும்போதும் என எந்தவிதமான அசாதாரண சூழ்நிலைகளிலும் பொறுமை காத்து அமைதியாக இருக்கும் குணம் பெற்றவர்கள் என்றும் பாராட்டுக்குரியவர்கள்.

எதிலும் அவசரப்படாமல் பொறுமை காப்பவர்கள் வாழ்வில் பல நன்மைகளைப்பெற முடியும். பொறுமை என்பது ஒருவரின் வாழ்வில் வெற்றியைப்பெற உதவும் ஒரு முக்கியமான பண்பாகும்.

பொறுமைதான் வெற்றிக்கான திறவுகோல். பொறுமையாக இருக்கவும், சரியான நேரத்திற்காக காத்திருக்கவும் நமக்கு சிறுவயதில் இருந்தே கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் மிகவும் விரும்பும் ஒன்றிற்காக காத்திருக்க வேண்டிய பல சந்தர்ப்பங்கள் உள்ளன. அது ஒரு உறவாகவோ, தொழிலாகவோ அல்லது நம்முடைய வாழ்க்கையின் வேறு எந்த முக்கியமான அம்சமாகவோ இருக்கலாம்.

நாம் விரும்பும் ஒன்றை மிக எளிதாகப்பெற முடிந்தால் அதன் அருமை தெரியாமல் போய்விடும். பொறுமையாக இருப்பது என்பது எதையும் கையாளக் கூடிய திறமையை பெற்றுத்தரும். பொறுமை என்பது ஒரு திறமை. அதனை மற்ற திறமைகளை வளர்த்துக் கொள்வது போலவே இதையும் வளர்த்துக்கொள்ள முடியும்.

வாழ்க்கை என்பது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது. எல்லா நேரங்களிலும் நாம் நினைத்தபடியே விஷயங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. பொறுமையாக காத்திருக்க மகிழ்ச்சியான தருணங்கள் நம்மைத்தேடி வரும். 'பொறுத்தார் பூமி ஆள்வார்'.

பொறுமை தெளிவை கண்டறியவும், கட்டுப்பாட்டை மீட்டெடுக்கவும், எதிர்மறையிலிருந்து விடுபடவும், உள்நோக்கி கவனம் செலுத்தவும் போதுமான வாய்ப்பை வழங்குவதன் மூலம் நமக்கான சுய விழிப்புணர்வை உருவாக்கவும் அனுமதிக்கிறது. வாழ்வில் வெற்றிபெற ஒழுக்கத்துடன் பொறுமையும் அவசியம்.

நிதானம் தவறினால் நிச்சயம் அவமானம்தான்!

நிதானம் தவறினால் நிச்சயம் அவமானம்தான்!


பொதுவாக நமது உடம்பில் இறைவனால் படைக்கப்பட்ட அவயவங்கள் பலவகையில் நமக்கும், சிலரது விருப்பத்தின் அடிப்படையில் அவர்களின் இறப்புக்குப் பின் உறுப்பு தானமாகவும் பயன்படுகிறது, இது பொதுவானது.

மனிதனுக்கு எப்போதுமே நிதானம் தேவைப்படும். பல நேரங்களில் நிதானமில்லாமல் மனிதன் பேசிவிடுவதும் உண்டு. அதன் தாக்கமாக வாா்த்தைகள் பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் வந்து போவதும் சராசரிதான்.

நாக்கு ருசி, ருசியில்லாதது போன்றவைகளை கண்டுபிடிக்க மட்டுமல்ல! வாா்த்தைகளிலும் நல்லது கெட்டதை வெளிப்படுத்திவிடுகிறது!

நரம்பில்லாத நாக்கு, தண்ணீாில் கிடக்கும் நாக்கு, எதையும் பேசும் என்பாா்கள்! அதுவா பேசுகிறது? மனிதனாகிய நாம்தான் பேசுகிறோம். நாமே பேசி நாக்கின் மீது பழியைப் போடுகிறோம், 

ஆங்கில வாா்த்தையில் "Always talk politely "அதாவது எப்போதும் பண்புடன் பேசுங்கள் என்பதுபோல நாம் பண்போடு பேசவேண்டும், நாணயத்தைவிட,"நா :நயமே" பல காாியங்களை சாதிக்க வல்லது!

அதேபோல கவனமுடன், விவேகத்துடன், முன்யோசனையுடன், நிதானத்துடன், பேசுவதை நாம் அன்றாட வாழ்வில் கடைபிடிப்பதே நல்லதாகும், அப்படி கடைபிடிக்க வேண்டிய விஷயங்களில் சிலவற்றைப் பாா்க்கலாம்.

பிறறிடம் பேசுவதற்கு முன் யோசியுங்கள் வாா்த்தைப் பிரவாகம் முக்கியம்.

நாம் பேசுவதை அடுத்தவர் கேட்க வேண்டும் என நினைப்பதுபோல மற்றவர்கள் பேசுவதையும் கவனமாக கேளுங்கள் அதுவே பண்பாடுகளுக்கு அடையாளம்!

பேச்சில் நல்ல நடத்தையைக் காட்டுவது சிறப்பானதே ,அதுவும் நமது குணநலன்களை பிறருக்கு எடுத்துக்காட்டும் கண்ணாடி போன்றது.

பேச்சுத்திறமையால் நண்பர்களைச் சோ்க்கப்பாருங்கள் அதை விடுத்து எதிாிகளை சம்பாதித்து விடவேண்டாம்! இங்குதான் நாக்கின் தன்மை பயன்படும்!

பொியவர்களிடம் பேசும்போது எப்போதும் மரியாதையை கடைபிடியுங்கள் அதன் வலிமை வலிமையானது.

நகைச்சுவை நமக்கு இறைவன் கொடுத்த வரம். அடுத்தவர்கள் மற்றும் உறவுகளில் பேசும்போது கோபம், வண்மம், காட்டாமல் நகைச்சுவையாக பேசுங்கள் அது நமக்கு பலமானது, பாலமானதும்கூட.

 சுய புராணம், சுய தம்பட்டம், தேவைதானா… தவிா்த்திடலாமே, ஏன் வீண் ஹம்பக்! வேண்டாம் வேண்டாம் அது ஆரோக்கியமான பண்பை வளா்க்காதே!

அடுத்தவர்களுக்கு புாியும்படி தெளிவாகப்பேசுங்கள், முணு முணுக்காமல் பேசுவது நல்லது.

எப்போதுமே வீண் வாக்குவாதம் தவிா்த்தல் நல்லதே அதை நாம் விலக்கவேண்டும்.

நமக்குத்தான் எல்லாம் தொியும் என்ற ரீதியில் அர்த்தமில்லாத வாா்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாமே!

பொது இடங்களில் நமது சொந்தக்கருத்தை திணிக்கவேண்டாம் அதை விலக்கிவிடுவதே சிறப்பிலும் சிறப்பு.

இன்னமும் சொல்லிக்கொண்டே போகலாம், நாம் பேசிவிட்டு நாக்கின்மீது ஏன் பழிபோட வேண்டும்? ருசியையும், ருசி இல்லாததையும், அதுதான் நமக்கு உணர்த்துகிறது என்பதை மறவாதிரு மனமே மறவாதிரு..!

புதிய வேலை மாற்றத்தில் உண்டாகும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி?

புதிய வேலை மாற்றத்தில் உண்டாகும் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி?



ஐ.டி. பணியாளர்கள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தாங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் நிறுவனத்தைவிட்டு, புதிய நிறுவனங்களை நாடிச்சென்று பணிபுரியும்போது அவர்களுக்கு அங்கே ஏற்படும் சவால்களையும் அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

தனிப்பட்ட/ தொழில்நுட்பத் திறன்கள்;

புதிய வேலை மாற்றம் என்பது உற்சாகமான ஒன்றாக இருந்தாலும் அதற்கேற்ற சவால்களும் இருக்கவே செய்யும். முந்தைய வேலைகளில் இருந்து ஏற்கனவே பெற்றுள்ள தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் தனிப்பட்ட திறன்களை அடையாளம் கண்டு அவற்றை புதிய வேலையில் பயன்படுத்த வேண்டும். புதிய வேலைக்கு விண்ணப்பிக்கும்போதே இவற்றை குறிப்பிட வேண்டும் மற்றும் நேர்காணலிலும் இந்த திறன்களை முன்னிலைப்படுத்தி தெரிவிக்கவேண்டும். அது உங்களைப் பற்றிய சிறந்த அபிப்பிராயத்தையும் நல்ல ஊதியத்தை அளிப்பதற்கான அஸ்திவாரம் ஆகவும் அமையும்.


புதிய விஷயங்களைக் கற்றல்;

புதிய நிறுவனத்தில் புதிய வேலைக்காக சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள நேரிடும். அவற்றை சின்சியராக கற்றுக்கொள்ள வேண்டும். நிறுவனம் நடத்தும் பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொண்டு அதற்கான துறை சார்ந்த அறிவை பெற்றுக் கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவில் முடியுமோ அதை கற்றுக்கொண்டு புதிய வேலையில் உள்ள சவால்களுக்கு தயாராக தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

உணர்வுகளை ஒப்புக்கொள்ளுதல்;

சில சமயங்களில் இதற்கு முன்பு பார்த்த வேலைக்கும் புதிதாக ஏற்றிருக்கும் பணிக்கும் நிறைய இடைவெளிகளும் வித்தியாசங்களும் இருக்கலாம். அப்போது இவற்றை நாம் செய்யமுடியுமா என்கிற சுய சந்தேகமும் பயமும் ஏற்படும். இவை இயல்பானவை என்பதை உணர்ந்து அங்கீகரிக்க வேண்டும். இந்த உணர்வுகளை கண்டு அஞ்சவோ அல்லது தன்னைத் தாழ்வாக எண்ணவோ தேவையில்லை. இது இயல்பானது என்று அந்த உணர்வை அங்கீகரித்துக்கொள்ள வேண்டும்.

எதிர்மறை எண்ணத்தை மாற்றுதல்;

புதிய பணி முற்றிலும் மாறுபட்டதாக கடினமானதாக இருக்கலாம். “நான் இதற்கு தகுதியில்லை, தெரியாமல் இங்கு வந்து மாட்டிக்கொண்டோமோ என்கிற எதிர்மறை எண்ணத்தை முதலில் தகர்த்தெறிய வேண்டும். கடந்த கால வெற்றியை நினைத்துப் பார்த்து தன் திறமையின் மீது நம்பிக்கை வைத்து எதிர்மறை எண்ணத்தை நேர்மறையாக மாற்றிக் கொண்டு செயல்பட வேண்டும்.

சக ஊழியர்களிடையே நல்லுறவு;

உடன் பணிபுரியும் நபர்களிடம் நல்லுறவை வளர்த்துக் கொள்வது அவசியம். தானாகவே வலியச்சென்று அனைவரிடமும் அறிமுகப்படுத்திக்கொண்டு ஈகோ பார்க்காமல் பழகவேண்டும். அப்போதுதான் புதிதாக வந்த உங்களை அவர்கள் தங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்வார்கள். ஏதாவது வேலையில் உதவி என்றால் தயங்காமல் செய்வார்கள். அவர்களுடன் நன்கு கலந்து பழகாமல் இருக்கும்போது சூழ்நிலை சிக்கலாகி விடலாம்.


நிபுணர்களின் உதவியைப் பெறுதல்;

புதிய நிறுவனத்தில் பணிபுரியும் நிபுணர்கள் அல்லது சீனியர்கள் போன்றவர்களின் உதவியை நாடத் தயங்ககூடாது. அவர்களது அறிவும் அனுபவமும் பெருமளவில் உதவியாக இருக்கும். மேலும் இணையத்தில் லிங்க்டின், நெட்வொர்க்கிங் நிகழ்வுகள் போன்றவற்றின் மூலமும் துறை சார்ந்த அறிவைப் பெற்றுக்கொள்ளலாம்.

நிதி சார்ந்த திட்டமிடல்;

புதிய வேலையை தேடத்தொடங்கும் முன்பு நிதி நிலைமையை ஸ்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். சிலர் அவசரப்பட்டு பழைய வேலையை விட்டு விட்டாலும் புதிய வேலை கிடைக்கும்வரை சமாளிப்பதற்கு ஏற்ற நிதி கையிருப்பில் இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பத்தை சமாளிக்க முடியும். போதுமான நிதி ஆதாரம் என்பது மிகப்பெரிய மன பலத்தைத் தரும்.

இந்த ஏழு விஷயங்களையும் கவனத்தில் கொண்டு செயல்படுத்தினால், புதிய வேலையில் வெற்றிகரமாக கவனம் செலுத்த முடியும்.

நம்பிக்கை உள்ளவர்களே வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்!

நம்பிக்கை உள்ளவர்களே வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்!


உலகில் வாய்ப்புகள் நிறைந்து உள்ளது. நாம்தான் அதைக் கண்டு கொள்வது இல்லை. கொஞ்சம் மூளையை உபயோகப்படுத்தினால் நாமும் வாழ்வில் முன்னேற்றம் காணலாம்.

பொதுவாக அனைவரும் சொல்லும் ஒரே வார்த்தை சின்ன வயதில் இதுவாகணும், அதுவாகணும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் பிறகு அதெல்லாம் கனவாகப் போய்விட்டது. வாழ்க்கை முடிந்துவிட்டது இனிமேல் என்ன இருக்கிறது என்று புலம்புவார்கள். முதலில் அந்த எண்ணத்தில் இருந்து வெளியே வரவேண்டும். நீங்கள் ஏதாவது ஆசைப்பட்டு இருந்தால் ஒருநாள் நிச்சயம் அது உங்கள் கைவசமாகும்.

அதற்கான வாய்ப்புகளை நீங்கள் உருவாக்க வேண்டும். நடந்துபோன செயல்களில் ஏற்பட்ட தோல்விகளை விட்டு விட்டு இனி நடக்கப்போகும் செயல்களை எப்படி வெற்றிகரமாக செயல்படுத்துவது என்று முடிவு செய்ய வேண்டியது நாம்தான்.


அதுதான் உண்மை. எத்தனை இடர்பாடுகள் வந்தாலும், அத்தனையையும் தாங்கிக்கொண்டு மீண்டு வரத்தான் வேண்டும். மனிதனுக்கு இக்கட்டான சூழ்நிலையில்தான் மூளை அதில் இருந்து விடுபட சுறுசுறுப்பாக இயங்கி வழியைக் காண்கிறது.

ஆகவே துன்பம் வரும்போது துவண்டுவிடாமல் சுறுசுறுப்பாய் இயங்க வேண்டும். மனோதிடம் இருந்தால் எந்தச் சூழ்நிலையையும் எளிதில் சமாளித்துவிடலாம் என்பதை அவ்வப்போது நினைவூட்டுகின்றனர் நம்மைச் சுற்றியிருக்கும் சிலர்.

தொழிலிலும், வாழ்க்கையிலும் வெற்றி அடைய வாய்ப்பு என்பது முக்கியத் தேவையாக இருக்கிறது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வதற்கும், வெற்றிக்கும் இடையே தொடர்பு இருக்கிறது.


ஜப்பானைச் சேர்ந்த கோட்டானி மகோட்டோ, என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புதேடி டோக்கியோ நகரத்திற்கு வந்தார். குடி இருக்க வீடு இல்லை. கையில் காசு இல்லை.

எத்தனையோ வேலைகளுக்கு விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை. சிந்தனை செய்தார். கொஞ்சம் வித்தியாசமாக தன்னையே வாடகைக்கு விட முடிவு செய்தார்.

“நான் வேலை அற்றவன். நகைச்சுவை உணர்வு மிக்கவன். உங்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க என்னால் முடியும். நீங்கள் கொடுக்கும் வேலைகளை செவ்வனே செய்வேன்.


உணவும், தங்கும் இடமும் அளித்து, மாதம் 500 ரூபாய் சம்பளம் கொடுத்தால் எனக்குப் போதும்” என்று சமூக வலைதளத்தில் வெளியிட்டார். நிறையப் பேர் கோட்டானியைத் தொடர்பு கொள்ள ஆரம்பித்தனர். ஓரிரு நாட்களிலிருந்து ஒரு வாரம், ஒரு மாதம் வரை இவரை வாடகைக்கு எடுத்தார்கள்.

500 ரூபாய் மிகவும் குறைவான ஊதியம் என்பதால் உடைகள், செருப்பு, போன் கட்டணம் என்று பலவற்றையும் தாங்களாகவே விரும்பிச் செய்கிறார்கள். உலகம் அன்பால் ஆன மக்களால் நிறைந்தது என்பதைக் கண்டு கொண்டேன்.


இதுவரை எந்த வாடிக்கையாளரும் மோசமாக என்னை நடத்தியதில்லை என்றார். ஆம். தன்னம்பிக்கை உள்ளவர்களே வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். நம்பிக்கை இல்லாதவர்களோ கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தத் தெரியாமல் அல்லல்படுகின்றார்கள்.

வாய்ப்பு நம்மைத்தேடி வராது. நாம்தான் தேடிப்போக வேண்டும். நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறி, வரும் வாய்ப்புகளை தட்டிக் கழிக்கக்கூடாது. வாய்ப்புகள் வரும் எனக்காத்து இருப்பதைவிட, வாய்ப்புகளை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

நல்லவற்றைப் பாராட்ட கற்றுக்கொள்வோமா?

நல்லவற்றைப் பாராட்ட கற்றுக்கொள்வோமா?


ஒவ்வொருவரின் மனமும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அடுத்தவர்களின் அங்கீகாரத்திற்காக ஏங்கி காத்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஒருவர் ஒரு செயலை நல்லபடியாக நிகழ்த்திவிட்டால் பாராட்டுவது என்பது சிறந்த செயல்.

ஆனால் எத்தனை பேருக்கு அடுத்தவர்களை பாராட்ட மனம் வருகிறது? தன்னால் முடியாத ஒரு செயலை வேறொருவர் செய்து முடித்துவிட்டால் பொறாமைதான் எழுகிறதே தவிர பாராட்டும் குணம் வருவதில்லை. இது தவறு. நல்லவற்றை மனம் திறந்து பாராட்ட கற்றுக்கொள்ள வேண்டும்.

பாராட்டு என்பது ஒவ்வொருவருக்கும் உந்து சக்தியாக இருந்து, ஊக்கம் கொடுத்து உற்சாகமாக செயல்பட உறுதுணையாக இருக்கும். நல்லவற்றை பாராட்ட கற்றுக்கொள்வது என்பது ஒருவருடைய செயல்கள், குணங்கள் அல்லது சூழ்நிலைகளை பற்றி பாராட்டுவதாகும்.


அதன் மூலம் அந்த பாராட்டு பெறுபவரின் மனதை மகிழ்ச்சி கொள்ள செய்வதையும் குறிக்கும். மனம் திறந்து பாராட்டுவதன் மூலம் அவர்கள் தங்கள் செயல்களை செய்ய மேலும் ஊக்கம் அடைவார்கள்; நமக்கும் அவர்களுடனான உறவு வலுப்பெறும்.

ஒருவர் செய்யும் நல்லவற்றை மனம் திறந்து பாராட்டும்பொழுது பாராட்டு பெறுபவருக்கு மட்டுமின்றி பாராட்டுபவருக்கும் நிறைய நன்மைகள் ஏற்படும். பாராட்டுவதால் ஒருவருடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். அத்துடன் அவர்களின் சுயமரியாதையையும் உயர்த்தும். பாராட்டு பிறருக்கு மகிழ்ச்சியை தருவது மட்டுமல்லாமல், பாராட்டு பவருக்கும் கூட மகிழ்ச்சியான உணர்வை அளிக்கும்.

வெறும் வாய் வார்த்தைக்காக பாராட்டாமல் உள்ளார்ந்த அன்புடன் ஒருவரை பாராட்டும் பொழுது அவர்களுக்கு அது ஊக்கமளிப்பதுடன், திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளவும் உதவியாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல விஷயங்களை பாராட்டுவது, மகிழ்ச்சியின் மூலமாக அமைகிறது. இது மனநலனை மேம்படுத்துவதுடன், உறவையும் வலுப்படுத்தும். ஒருவருக்கொருவர் புரிதலையும், நேர்மறையான அணுகலையும் வளர்க்கும்.


பொத்தம் பொதுவாக பாராட்டாமல் ஒருவரின் குறிப்பிட்ட செயலை குறிப்பிட்டு பாராட்டுவது எதிர்தரப்பினருக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். அதுவும் உண்மையாக பாராட்ட வேண்டும். பொய்யான புகழ்ச்சி வெகு விரைவில் அனைவருக்கும் புரிந்துவிடும். அத்துடன் நம் மீதான நம்பகத் தன்மையும் குறைந்துவிடும்.

எனவே பாராட்டுவது உண்மையாக இருக்க வேண்டும். பாராட்டப்படும் ஒவ்வொரு நொடியும் மனிதனின் ஆற்றலும் திறமையும் பல மடங்குகள் பெருகுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஜஸ்ட் ஒரு கைகுலுக்கல், முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டுவது, தலையை கோதிவிடுவது, புன்னகையால் அங்கீகரிப்பது என்று பாராட்டுகள் பல பரிமாணங்களைக் கொண்டது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பாராட்டுக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. பாராட்டுவதால் உற்சாகம் ஏற்படும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஒரு சிறிய செயலை செய்யும்போது கூட பாராட்டினால் அது மிகப்பெரிய செயல்களுக்கு வழிவகுக்கும் என்பதுதான் உண்மை. இனியாவது மனம் திறந்து பாராட்டுவோமா?

வெற்றிக்குத் தடையாகும் 'சூப்பர்மேன்' பவர்..!

வெற்றிக்குத் தடையாகும் 'சூப்பர்மேன்' பவர்..!


நீங்கள் சூப்பர்மேனாக விரும்புகிறீர்களா? எப்போதுமே ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டிருப்பது அல்லது அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது என்பது மன அழுத்தத்திற்கு காரணமாக அமையும் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆனால் ஒரு 'சூப்பர் மேன்' அல்லது 'சூப்பர் வுமன்' என்ற தகுதியில் இருப்பவர்கள் இதையே விரும்புகிறார்கள். எப்பொழுதுமே தங்களை ஒரு எல்லைக்கு கொண்டு சென்று நிறுத்திக்கொண்டு யாராலும் பெறமுடியாத ஒரு அபரிமிதமான வெற்றியைகாண முயற்சிப்பது அவர்களின் குறிக்கோளாகவே இருக்கிறது. ஆனால் இதனால் அவர்கள் பெறப்போவது என்ன?

சில நேரங்களில் அமைதியின்மை மற்றவர்களுடன் இணைந்து இயங்க இயங்க முடியாமல் தவிப்பது, சின்ன சின்ன மகிழ்ச்சிகளையும் இழப்பது, போன்றவைகளை இவர்கள் எதிர்கொள்ள வேண்டும். இந்த சூப்பர்மேன் அல்லது விமன் ஆக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களை கூட்டத்திலும் எளிதாக இனம் காணலாம்.

எப்போதும் எந்த சூழலிலும் ஒவ்வொருவரும் அவர்களை நேசிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதற்கான கவனஈர்ப்பு செயல்களில் ஈடுபடுவர். மற்றவர்கள் சொல்வதை ஒப்புக்கொள்ளாமல் தன் கருத்தை வலியுறுத்திவார்கள்.

சுற்றி இருக்கும் நண்பர்கள் இடையே தான் மட்டுமே மிக அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என நினைப்பார்கள். அவர்களைவிட பழகுவதில் வல்லமை படைத்த ஒருவரை காணும்போது தன்னைப் பற்றிய கீழான மதிப்பு தோன்றும். அவருக்கு தெரியாத ஒரு உண்மை பிறருக்கு தெரிந்திருக்குமேயானால் அதைப் பொறுக்காமல் தங்களையே நொந்து கொள்வர்.    

அவர்கள் செயல்படும் காரியங்களில் எல்லாம் ஒரு சாதனையை ஏற்படுத்தி காண்பிக்கவில்லை எனில் அவர்களால் முழு திருப்தி அடைய முடியாது இப்படி எல்லாவற்றிலும் தாங்களே முதன்மையானவராக இருக்க வேண்டும் என்று நினைத்து அதற்கான செயல்களில் எந்நேரமும் ஈடுபட்டு சிந்தனையை அதற்கு செலவழிப்பவர்களே சூப்பர்மேன் ஆக சொல்லப் படுகிறார்கள்.

ஆனால் முழுமையான வெற்றியை அவர்கள் பெறுகிறார்கள் என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

உதாரணமாக ஒரு விஷயத்தை மட்டும் இங்கு காண்போம். சிறந்த எல்லாவற்றையும் அடையவேண்டும் என்று விரும்புவதில் தவறில்லை. ஆனால் மற்றவர்களுடைய வாழ்க்கை அணுகுமுறை உங்களுடைய வாழ்க்கை முறையை விட வேறுபட்டு இருக்கலாம். ஒரு சிலர் கார்கள், வீடுகள் மற்றும் வருமானம் இவற்றுக்கு முன்னுரிமை தந்து மதிப்பிடலாம். சிலர் குடும்பம் குழந்தைகள் என மகிழ்வைக் கணக்கிடலாம். இந்த மாதிரி முறைகள் எதுவுமே மகிழ்ச்சியை கொடுத்துவிடுமா? யோசித்துப் பாருங்கள். ஒவ்வொருவருக்கும் இது எவ்வளவு சாத்தியப்படும் என்று.

ஆதலால் இது போன்று சிறந்ததாகக் தோன்றும் விஷயத்தை நாடி நம் மன அமைதிக்கு ஊறு விளைவிக்க விடுவது நமது வெற்றிக்குத் தடையாகத்தானே அமையும்? எதார்த்த வாழ்க்கைக்கு பொருந்தாத கனவு போன்று எதிர்பார்ப்புகள் நம்மை ஒரு மோசமான அழுத்தத்திற்கு கொண்டு சென்றுவிடும்.

நீங்கள் சூப்பர்மேன் ஆக விரும்புவதின் உள் அர்த்தம் நீங்கள் உங்களை குறைவாக மதிப்பிட்டு கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான். அதைவிட்டு வெளியே வாருங்கள்.

சூப்பர்மேன் அல்லது வுமன் கனவுகளை எல்லைக்குள் வைத்து வாழ்க்கையை சூப்பராக மாற்ற முயல்வோம். சூப்பர்மேன் சூப்பர் விமன் எனும் அந்தஸ்தை பெறுவதற்கு மன அழுத்தத்துடன் பாடுபடுவதை விடுத்து நம்மால் முடியும் இலக்குகளை வகுத்துக் கொண்டு வெற்றியை நோக்கி மன நிம்மதியுடன் பயணிப்பதே வெற்றிக்கு உதவும் வழியாகும்.

பிறர் குறைகளை விமர்சனம் செய்யாதீர்!

பிறர் குறைகளை விமர்சனம் செய்யாதீர்!


உலகில் பிறந்த மனிதர்கள் அனைவரும் எதிலும் முழுமையாய் இருப்பது இல்லை. குணத்திலோ, உடலிலோ ஏதாவது ஒரு குறையுடன்தான் இருப்பார்கள்.

குணத்தில் குறை இருந்தால் காலமாற்றம் அவர்களைத் திருத்திவிடும். அதற்காக நாம் ஏன் அவர்களின் செயல்பாட்டை விமர்சனம் செய்யவேண்டும். தேவையில்லாமல் செய்யும் விமர்சனத்தால் பிரச்னைகள் உருவாகவும் கூடும். நண்பர்களிடையே விளையாட்டாய் பேசும் விமர்சனமும் கூட. விபரீதத்தை உண்டாக்கிவிடும்.

அதனால் மனக்கசப்பு உண்டாகிவிடுகிறது. தீராத பகை உணர்வும் வளர்ந்துவிடும். எனவே, முடிந்தவரை யாரைப்பற்றியும் விமர்சனம் செய்யாமல் இருந்து பாருங்கள்.

ஒரு கருத்தை முக்கியமாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நாம் பிறரைப் பற்றி விமர்சனம் செய்து மகிழ்கின்றோம் என்றால், நம்மைப் பற்றியும் பிறர் விமர்சனம் செய்வார்களே என நினைத்துக் கொள்ளுங்கள்.


நீங்கள் காலம் முழுவதும் மகிழ்ச்சியாய் வாழ விரும்புகிறீர்களா! பிறரைப் பற்றி எந்த விமர்சனமும் செய்யாதீர்கள். உங்களுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லையர அவரைவிட்டு ஒதுங்கிச் செல்லுங்கள். அதுதான் நல்லவழி ஆகும். நாம் ஒரு விரலை நீட்டி பிறரைக் குற்றம் சுமத்தும்போது மற்ற மூன்று விரல்களும் நம்மை நோக்கித்தான் இருக்கின்றன. எனவே பிறர் குறைகளை விமர்சனம் செய்யாமல், நம் குறைகள் என்ன என அறிந்து, அதை நீக்க முயற்சி செய்யலாம்.

நம்மிடம் உள்ள குறைகளைப் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. முதலில் நம்மை நாம் மாற்றிக்கோள்வோம். முதலில் நம்மைப் பற்றி சிந்திப்போம். கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருப்போம். எதிர்காலத்தில் முடிந்தவரை, தவறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம்.


அதற்கு எப்பொழுதும் நல்லதைப் பற்றி சிந்தித்தாலே போதும்! நம் மனதை எப்பொழுதும் நல்ல சிந்தனைகள் ஆளுமை செய்யும் பொழுது, பிறரின் குறைகள் நம் கண்களுக்கு என்றும் தெரிய வாய்ப்பில்லை.

இறைவன் நமக்கு நல்ல இதயத்தைத் தந்துள்ளான். இதயத்தை எப்பொழுதும் தூய்மையாக வைத்துக் கொள்வோம். தேவை இல்லாத குப்பைகளைப் போட்டு அதில் நிரப்பவேண்டாம்.

பிறரைக் குறைகூறி வாழ்பவர் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாதவர் ஆவார். தான் மட்டும் யோக்கியமானவர். மற்றவர் எல்லாம் பிழை செய்பவர் என்றே காட்டிக்கொள்வார்கள்.

மற்றவர்களைத் திருத்தவேண்டும் என ஆசைப்படுவது தவறு அல்ல. முதலில் அவரின் தவறுகளைத் திருத்திக் கொள்ளவேண்டும். அதுதான் முதல் கடமை ஆகும்.


பிறரைக் குறை கூறியும், ஏளனம் செய்தும் வாழ்பவர் மனிதரே இல்லை. இவர்கள் அனைவரும் மானிட ஜென்மத்தில் தப்பிப் பிறந்த பிறவிகளே

யாரிடம் குறை இல்லை யாரிடம் தவறில்லை வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை...

என்ற கவிஞரின் வார்த்தைகள் மனதில் பதியட்டும்.

பேச்சுத் திறனை வளர்ப்பது எப்படி? யாரிடம் எப்படிப் பேசணும்னு தெரிஞ்சிக்கோங்க!

பேச்சுத் திறனை வளர்ப்பது எப்படி? யாரிடம் எப்படிப் பேசணும்னு தெரிஞ்சிக்கோங்க!



நம்ம வாழ்க்கையில எத்தனையோ விஷயங்கள் இருக்கு. அதுல ரொம்ப முக்கியமானது மத்தவங்க கூட நாம எப்படிப் பேசுறோம்ங்கிறதுதான். சரியாப் பேசத் தெரிஞ்சா, பாதிப் பிரச்சினை அங்கேயே முடிஞ்சுடும். இல்லைனா, சின்ன விஷயமும் பெரிய பூகம்பமா வெடிக்க வாய்ப்பு இருக்கு. பேச்சுத் திறன் அப்படிங்கறது வெறும் வார்த்தைகளை கோக்குறது இல்லை, அது ஒரு கலை. யாரிடம் எப்படிப் பேசணும்னு தெரிஞ்சிக்கிட்டா, நம்ம வாழ்க்கை இன்னும் சுவாரஸ்யமா இருக்கும்.

யாருகிட்ட பேசினாலும், முதல்ல தெளிவாப் பேசுறது ரொம்ப முக்கியம். நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு அவங்களுக்குப் புரியணும். அவங்களுக்குப் புரியாத வார்த்தைகளையோ, வேகமாவோ பேசக்கூடாது. அதேமாதிரி, பயமில்லாம, தன்னம்பிக்கையோட பேசுங்க. கண்ணைப் பார்த்துப் பேசுறது நம்ம பேச்சில் ஒரு அழுத்தத்தைக் கொடுக்கும். நம்மகிட்ட பேசறவங்க சவுகரியமா உணர்ற மாதிரி, ஒரு புன்சிரிப்போட ஆரம்பிக்கலாம்.

அடுத்து, ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒவ்வொரு மாதிரி பேசணும். பெரியவங்க கிட்ட பேசும்போது, மரியாதையோட, பணிவாப் பேசணும். அவங்க அனுபவத்துக்கு மரியாதை கொடுத்து, அவங்க சொல்றத காது கொடுத்து கேட்கணும். அவங்களுக்குப் புரியற மாதிரி, பொறுமையா பேசணும். நண்பர்கள் கிட்ட பேசும்போது, சரளமா, கலகலன்னு பேசலாம். ஆனா, அவங்க மனசு நோகாம பார்த்துக்கணும். ஜாலியா பேசுறது முக்கியம், ஆனா எல்லை மீறக் கூடாது.

வேலை பார்க்கிற இடத்துல, குறிப்பா மேலதிகாரிகள் கிட்ட பேசும்போது, சுருக்கமா, நேரா விஷயத்துக்கு வந்து பேசணும். தெளிவான வார்த்தைகளைப் பயன்படுத்தணும். தேவையில்லாத பேச்சுகளைத் தவிர்க்கணும். புதுசா ஒருத்தர்கிட்ட பேசும்போது, பொதுவான விஷயங்களை பத்தி பேசி, அவங்க சவுகரியமா உணர்ற மாதிரி பேசணும். அவங்க எப்படிப் பேசுறாங்கன்னு கவனிச்சு, அதுக்குத் தகுந்த மாதிரி நாமளும் பேசலாம்.

அதுமட்டுமில்லாம, பேசுறதுக்கு முன்னாடி, நல்லா கேட்கணும். மத்தவங்க என்ன சொல்றாங்கன்னு புரிஞ்சிக்காம பேச ஆரம்பிச்சா, தப்பாப் போய் முடியும். நல்லா கேக்குறதுனாலதான், தெளிவா பதில் சொல்ல முடியும். உடல் மொழியும் ரொம்ப முக்கியம். நீங்க சொல்றதுக்கு ஏத்த மாதிரி உங்க உடல் அசைவுகள் இருக்கணும். தலை அசைக்கிறது, முகம் காட்டுறது இதெல்லாம் உங்க பேச்சிற்கு துணை நிற்கும்.

பேச்சுத் திறமையை வளர்த்துக்கிறது ஒரு நாள்ல நடக்கிற வித்தை இல்லை. தினமும் கொஞ்சம் கொஞ்சமா பயிற்சி பண்ணணும். ஒவ்வொரு முறையும் யார்கிட்ட பேசினாலும், 'நாம நல்லா பேசினோமா? அவங்களுக்கு புரிஞ்சுதா?' அப்படின்னு யோசிச்சு பாருங்க. இப்படிப் பயிற்சி பண்ணா, உங்க பேச்சுத் திறமை கண்டிப்பா மேம்படும். மத்தவங்க மனசுல நீங்க ஒரு நல்ல பேச்சாளரா இடம்பிடிச்சு, உங்க வாழ்க்கை இன்னும் அழகாகும்.

வியாழன், 10 ஜூலை, 2025

புதிய தகவல்களும், கூடுதல் உழைப்பும் வெற்றிக்கான வழிகள்!

புதிய தகவல்களும், கூடுதல் உழைப்பும் வெற்றிக்கான வழிகள்!

எண்ணங்களும் திட்டமிடலும் மனதின் இயல்பான வேலை, நுரையீரல்கள் சுவாசிக்கிற மாதிரி. விஷயங்கள் சரியானவிதத்தில் நடக்கும்போது, நீங்கள் உறுகறுப்பாய் உணரும்போது, நீங்கள் எதைச் செய்து கொண்டிருக் கிறீர்களோ அதில் முழுமையான கவனம் வைக்கிறபோது, உங்களுக்குள் ஏதோவொன்று நிரம்பி வழிவதாயிருக்கும்.

உளவியல் நிபுணர் ஒருவர் தன்னார்வத்துடன் முன்வந்த எண்பத்திரண்டு பேர்களை ஆராய்ந்தார். அவர்களில் பகுதிநேர வேலை செய்பவர்களும், எழுத்தர்களும், பொறியியல் நிபுணர்களும், மேலாளர்களும் இருந்தார்கள். நாள் முழுதும் தங்கள் வேலையில் அவர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பது பதிவு செய்யப்பட்டது.

சவால் இல்லாத வேலையைச் செய்கிறபோது அவர்கள் சலிப்படைந்ததையும் அதிகமாய் கோரும் (demanding) கடின வேலையைச் செய்கிறபோது, கவலையுற்றதையும் ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்தனர். அப்போது கவனத்தை உச்ச அளவில் ஒருமுனைப்படுத்த வேண்டியிருந்தது.



பந்தயக்குதிரை மூக்கை நீட்டுவதில், தொலைதூர ஓட்டக்காரர்கூடுதலாய் எடுத்து வைக்கிற ஓரடியில் வெற்றிபெற முடிகிறது. மைதானத்தில் இன்னொரு புள்ளி, இன்னொரு முயற்சி போதும் குழுவின் வெற்றிக்கு.

எந்தத்துறையிலும் எண்ணற்றத் திறமைசாலிகள் இருக்கிறார்கள். போட்டியிடுகிறவர்கள் மிகவும் பயிற்சி பெற்றவர்கள். யாரும் மற்றவர்களக் காட்டிலும் கூடுதல் தகுதியோ, குறைந்தத் தகுதியோ பெற்றிருக்கவில்லை. வெற்றி

பயக்கும் சூழ்நிலை ஒரு ஐந்து அல்லது பத்து சதவீதம் கூடுதலாய் இருந்துவிட்டால் போதும் நீங்கள் அத்தனை பேரையும் முந்திச் செல்வதற்கு.


காட்டு வழியில் நடைப்பயணம் செய்கிறவர்கள் இரண்டுபேர் போகிறவழியில் அடிக்கடி கரடிகள் இருப்பதற்கான அறிகுறிகளைக் கண்டார்கள். ஒருவன் மரத்துண்டு ஒன்றின்மீது அமர்ந்து தனது நடப்பதற்கான காலணிகளைக் கழற்றிவிட்டு, ஓடுவதற்கான காலணிகளை மாட்டிக்கொண்டான்.

"நீ என்ன செய்கிறாய்?" அவனுடைய நண்பன் கேட்டான்.

'நான் ஓடுவதற்கான ஷூவை மாட்டிக்கொள்கிறேன் என்று பதில் வந்தது.

"உனக்கென்ன பைத்தியமா? கரடி கொடூரமானது. ஓட்டத்தில் நீ அதைவிட வேகமாய் ஓடமுடியும் என்று நினைக்கிறாயா?"

முதலாவது நபர் சொன்னான், "நான் கரடியைத் தாண்டி ஓட வேண்டுமென்பதில்லை. உன்னைவிட வேகமாய் ஓடினால் போதும்'' என்று.

ஆம், மற்றவர்களைவிட ஐந்து முதல் பத்து சதவிதம் அனுகூலமான சூழ்நிலை உங்களுக்கு அமைந்துவிட்டால் போதும்.புதிய விஷயங்கள் உங்களுடைய அறிவு சார்ந்த செல்களை நீட்சியடையச் செய்யும், நினைவாற்றலை அதிகரிக்கும் பழைய விஷயங்களைத் திரும்பத் திரும்பப் படிக்கிறபோது, மூளைத்திறன் ஒன்றும் வளர்ந்துவிடாது.


உங்களுக்குள்ளிருக்கும் பதின்மூன்று ட்ரில்லியன் 'செல்'களை உந்துவதன் மூலம்தான், உண்மையான வளர்ச்சியை நீங்கள் பெற்றவராவீர்கள். அவற்றை இன்னும் கொஞ்சம் கடினமாய் வேலை செய்ய வைக்கவேண்டும். புதிய தகவல்களை உள்வைப்பதன் மூலம் அதை நீங்கள் செய்ய முடியும்.

ஒரு சிறிய தகவல் என்றாலும் அது 'செல்'களை அறிவார்ந்த விதத்தில் திறனுடையதாக்கும் என்பதால் புதிய தகவல்களும் அதிக உழைப்பும் வெற்றிக்கான வழிகளாக இருக்கின்றன.