புதன், 9 ஜூலை, 2025

கவனத்தை கவனித்து செயல்படுத்துங்கள்

கவனத்தை கவனித்து செயல்படுத்துங்கள்

நுண்ணறிவு, திறமை, அறிவுக்கூர்மை, கற்றுக்கொள்கிற ஆர்வம், செய்திறன் இவையெல்லாம் மனத்திறன்கள், வளர்த்துக் கொள்ளப்படுபவை.

அவை பிறக்கும்போதே வளர்ச்சியை எதிர்பார்த்து உள்ளுக்குள் அடங்கிக்கிடப்பவை. ஒவ்வொரு இயல்பான குழந்தையிடமும் இதே நிலைதான். குழந்தை வளர்ச்சியடையும்போது ஒரு கட்டத்தில் அவை வெளிக்கொணரப்படும். அந்தக் கட்டம் அவன் கற்பதற்குத் தயாராகும் கட்டம். அவன் கற்கிறான். செயற்படுத்துகிறான். செயல்தூண்டல் உணர்வும் (motivation) ஆக்கபூர்வ மனோபாவமும் அதில் இடம் பெறுகிறது.

சிறப்படைவதற்கான திறன் உங்களிடமிருந்தாலும், உங்கள் சாதனைகளை வைத்தே உங்களுடைய மதிநுட்பமும், திறன்களும் மதிக்கப்படுகின்றன. சிறந்த சாதனை என்பது தொடர் முயற்சியின் விளைவு. உறுதியான குறிக்கோள்களை அடையும் விருப்பத்தில் அது தொடங்குகிறது.

"யார் கற்க விரும்புகிறாரோ அவருக்குத்தான் இருக்கிறது கற்றுணரும் பொறுப்பு. யார் கற்பிக்க விரும்புகிறாரோ அவருக்குத்தான் உண்டு கற்பிக்கும் பொறுப்பு". குழந்தையைக் கற்கத் தூண்டுவது பெற்றோர், ஆசிரியர், அரசின் பொறுப்பு என்றாலும் தனக்குத்தானே செயல்தூண்டல் உணர்வை வழங்கிக்கொள்ளும் பொறுப்பு ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

சிறப்புத் தகுதி என்பது ஒரு சதவிகித தூண்டுதலிலும் தொண்ணூற்றியொன்பது சதவிதம் கடும் உழைப்பிலும் பெறப்படுவது. அந்த ஒருசதவித அகத்தூண்டுதல் இல்லாவிடின் நீங்கள் தொடர்ந்து முயற்சிப்பதில்லை.


ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் மரபு, சுற்றுப்புறம். உணர்வு மற்றும் உணர்வற்ற மனம் அனுபவம். நிலை, இன்னும் அறிந்த, அறியாத செயல்திறன்கள் இவற்றில் உண்டாக்கப்பட்டபொருள்தான், நீங்கள்.

தினமும் ஒரு அரைமணி நேரம் ஆக்கபூர்வமான சிந்தனைக்கும், வாழ்வின் உறுதியான குறிக்கோள் ஒருமுனைப்படுவதற்கு செலவிடுங்கள். இந்த நேரத்தில் நீங்கள் விரும்பியவைகளில் மனதை ஈடுபடுத்துங்கள். விரும்பாதவற்றில் இருந்து விலகிவிடுங்கள்.

ஆக்க பூர்வ சிந்தனைக்காக தினமும் பல மணி நேரங்களைச் செலவிடுவார் தாமஸ் ஆல்வா எடிசன் ஆக்கப்பூர்வ சிந்தனை என்பது வேலை அல்லது வேலைக்கு ஆயத்தமாகும் நிலைக்கு முந்தையது.

சுயமுன்னேற்றத்துக்கு முக்கியம் கற்றறிதல், உயர்நிலைப் பள்ளி, கல்லூரிப்படிப்பு இவற்றோடு கற்பதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார்கள். ஒருசிலர்தான் மேலும் படித்து சிறப்பறிவு பெறுகிறார்கள் பலரும் அத்தோடு படிப்பு முடிந்துவிட்டதாய் கருதிக் கொள்கிறார்கள். உண்மையில், தொழில்நுட்பப் புரட்சி இன்று உலகெங்கும் பரவியிருக்கும் நிலையில் தொடர்ந்து கற்றுக் கொண்டேயிருப்பது அவசியமாகிவிட்டது.

நமது உயர்தொழில் நுட்ப சமுதாயத்தில் ஒரு பொறியியல் பட்டதாரியின் படிப்பறிவு ஐந்து வருடங்கள் தாக்குப்பிடிக்கும் பிறகு அது வழக்கற்றதாகிவிடும். சம்பிரதாயக்கல்வி வேலை பெறுவதற்கான ஒரு தகுதி அவ்வளவுதான். எதிர்கால வெற்றி கவனத்தைக் கட்டுப்படுத்தி அறிவை செயற்படுத்துங்கள், அதுவே வெற்றிக்கான முக்கிய விதி.


கவனந்தான் நுண்ணறிவைத் தருகிறது. கற்பனை. கற்றுணர்தல், அறிவியல், தேர்ச்சித்திறன் (Skit) என்று எல்லாமும் கவனத்தையே சார்ந்திருக்கின்றன. நியூட்டனின் சிறந்த கண்டுபிடிப்புகள் அவ்வாறே நிகழ்ந்தன. அது பாலங்களை அமைக்கிறது. புதிய உலகங்களுக்கான வாயில்களைத் திறந்து வைக்கிறது.

சுவனம் மட்டும் இல்லையென்றால் எல்லாமே சுவையற்றுப் போகும் இலக்கிய அழகுகளெல்லாம் கண்டுகொள்ளாமல் விடப்படும்.


Previous Post
Next Post

0 Comments: